தேடி திரவியம் பெற்று
மகரந்த மணம் பூசி
கரங்களுக்குள் சூடி
பின் பாராமல்
முன் நோக்கி
என்று மெச்சி
சிரிப்புக்குள் ஒளிந்து
மாற்றம் என்று பேதலித்து
ஓடி சுகம் கொண்டு
மனம் உருகி
மொழி கொண்டாடி
கண்ணீர் நெருக்கி
முட்கள் மோதி
மண்டி இட்டு விலகி
மதில் ஏறி மோகம் கொண்டு
காற்று நுழய மறுத்து
குருதி பெய்து
சூத்திரம் மறந்து
ஆத்திரம் பெருகி
வேறொரு பெண்ணுடன்
படுக்கையில் வீழ்ந்தாலும்
முடிவுரை எழுத விடாமல் மறுக்கிறது
அன்று கேட்ட உன் விசும்பல்

0 comments: