ரயில் கொடை ரோடை தாண்டி சென்று கொண்டிருந்தது.எனக்கு ஒன்றும் பயணம் புதிது அல்ல.பயணத்தில் நினைவுகள் என்னை கொடுமை படுத்துவதும் புதிது அல்ல.சுகமான நினைவுகள் என்னை ஆர்பரித்து, என் பயணம் அமைந்த நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
என் வாழ்க்கையில் சோகமே பெரிதாய் தலை விரித்து அடியதாக நினைத்து கொள்ளவேண்டாம்.என் வாழ்க்கையில் ஏற்படுத்தி கொண்ட சோகங்கள் எல்லாம் இன்று நினைத்தால் சிரிப்பாக வருகிறது. ஆனால் அந்த அந்த பொழுதுகளுக்கு அது எனக்கு முக்கியமாக பட்டு இருக்கிறது.எப்படி எனக்கு சௌபர்நிகா ஒரு தருணத்தில் முக்கியமாக தெரிந்தாளோ அது போல் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு உறவுகளை நான் தேடி கொண்டு என்னை நான் சிரமபடுத்திகொண்டிருந்தேன்.ஆனால் அந்த ஒரு கணத்திலும் என் இயல்பு வாழ்க்கையை நான் விட்டு தர வில்லை.
நான் ஒரு சராசரி மாணவன் போல் தான் வெளி காட்டி கொண்டிருந்தேன்.உண்மையை சொல்ல போனால் என்னை போல் யாரும் பெண் துணை இல்லாதவர்கள் தான் சராசரியாக இருந்தார்கள் .மற்றவர்கள் எல்லாம் காற்றில் வரியாந்தர்கள்,வெட்ட வெளியில் சிரித்தார்கள்,பகலில் உறங்கினார்கள்,டிரைவர் வேலை செய்தார்கள்,சக மாணவர்களிடம் சண்டை போட்டார்கள். எனக்கு தெரியும் என்னுடன் இருந்தவர்களும் என்னை போலவே தான் இருந்தார்கள் என்று!!!.என்ன செய்வது எவனும் ஒத்துக்கொள்ள மாட்டான்.ஒத்து கொண்டால் கண்டிப்பாக நியாயப்படுத்த மாட்டான்.
நான் சொல்லுகிறேன் இளமையில் தேடுவது ஒரு கொடுமை அதை உறவில் மயப்படுத்தி தேடுவதி கொடுமையிலும் கொடுமை.தேடல் நம்மை தனிமைக்கு தான் தள்ளி விடும் .தனிமை நம்மை சோகத்துக்கு அட்படுத்தி விடும்.
எனக்கு ஒரு சில நண்பர்களில் தம்பிதுரை என்பவன் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவன்.அதிகம் பேச மாட்டான்.அதிகம் ஆசையும் பட மாட்டான் ,யாராவது பேசினால் பேசுவான் .கல்லூரியில் நடக்கும் பொது தண்ணி பார்டிகளில் கண்டிப்பாக இருப்பான் .நான் அவன் ,விஜய் சேகர் மூன்று பேரும் ஒரே பெஞ்சில் அமர்ந்து இருப்போம் . EEE என்ற கோர்ஸ் படிக்க லாயக்கில்லாத நம்பர் 1,2,3 .இதில் விஜய் கொஞ்சம் உஷார் கடைசி நேரத்தில் கட்சி மாறி பிரக்டிகல்ஸ் எல்லாவற்றையும் கற்று கொள்வான்.நானும் தம்பிதுரை மட்டும் தனியாக மாட்டி கொள்வோம்.அந்த முழு டிபார்ட்மேன்டிலே எனக்கு அவன் தான் கொஞ்சம் ஆறுதலாக இருப்பான்.

அவனுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒற்றுமை நாங்கள் இருவரும் ஒரே நாள் புகைக்க ஆரம்பித்தோம் என்பது தான். அவனுக்கும் எனக்கும் தொடர்பு கொஞ்சம் மெலிந்து போய்விட்டாலும் அவன் எனக்கு குறிப்பிட்டு சொல்ல கூடிய நண்பர்களில் ஒருவன் .ஒரு நாள் இரண்டாம் அண்டு தேர்வுக்கு முன் படிக்கும் நாட்களில் எங்களுக்கு ஒரு பத்து நாட்கள் விடுமுறை அமையும்.நாங்கள் படிப்பதற்காக பல்கலைகழகமே கொடுத்த விடுமுறை.அதில் பாடத்தை படித்ததை விட ஆனந்தவிகடனையும்,குமுதத்தையும் ,தமிழ் சினிமாவையும் ,குறிப்பாக புது பழக்கங்களையும் தான் படித்து இருக்கிறோம்.உலகில் உள்ள எல்லா மாணவர் சமுதாயத்துக்கு நாங்கள் மட்டும் விதி விலக்கா என்ன. அப்படி பழகியது தான் இந்த புகை.
உலகில் உள்ள எல்லா துன்பத்துக்கும் உள்ள ஒரே முற்றுபுள்ளி அதாவது தீர்வு அல்ல.மறுபடியும் சொல்லுகிறேன் முற்று புள்ளி என்றைக்குமே தீர்வு அல்ல.அடுத்த முறை அந்த துன்பம் அடுத்த வரியில் தோன்றலாம் .டேய் ரொம்ப தத்துவமா நினைக்கிற என்று தோன்றியது.இந்த புகைக்கு உள்ள வீரியத்தை எனக்கு தந்தது என் கல்லுரியில் உள்ள துணி துவைக்கும் இடம் தான்.
ஒரு தடவை நானும் தம்பிதுரையும் சேர்ந்து கல்லூரிக்கு வெளியில் உள்ள ஹோடேளில் (Hotel )சாப்பிட்டு விட்டு வந்து கொண்டு இருக்கும் போது எங்களுடன் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை நண்பனும் வந்து கொண்டிருந்தான்.
" டேய் கிங்க்ஸ் எல்லாம் ஒருத்தர் முழுசா அடிக்க முடியாது தெரியுமா !!!"
"அப்பிடியா " எனக்கு அப்பொழுது கிங்க்சுக்கும் வில்ல்சுக்கும் வித்தியாசம் தெரியாது
"ஆமாண்டா நம்ம சீதாராம் இருக்கான் இல்ல அவன் முழுசா ஒரு கிங்க்ஸ் அடிப்பான் ...

"நீ எவள்ளவு டா அடிப்ப்ப"
"நான் 3/4 அடிசுருகேன் டா "
ராஜதுரைக்கு எப்பொழுதும் முடியாததை செய்து விடலாம் என்று சவால் விடுவான்.ஆனால் அந்த சவால் அவன் தெரிந்தவர்களிடம் மட்டும் தான் விடுவான்
"நான் முழுசா அடிப்பேன் டா முழுசா "என்று சவால் விட்டான் துரை "
"இல்லடா துரை வேண்டாம் இந்த மெக்கானிகல் வினேஷ் சொல்லிருக்கான் எங்கிட்ட,தம் அடிட்சா விட முடியாதுன்னு அவன் ரொம்ப பீல் பண்ணுவான் அடிக்கடி."
"டேய் நம்ம என்ன அப்பவுமா அடிக்க போறோம் " என்றான் துரை
"நம்மாளா ??" இது நான்
"அடிடா"
"நீ வட்சுருகியா "
"இல்லடா இரு வாங்கறேன் "என்று ரொம்ப ஆர்வமாக அந்த வேற்று துறை நண்பன் சென்றான்.
இதில் சுகம் என்னவென்றால் புகை பிடிக்காதவனை எதாவது ஒரு காரணம் சொல்லி எப்படியாவது புகை பிடிக்க வைத்து விடுவார்கள்.அது ஒரு Universal Practice .இப்படியாக நானும் ராஜதுரையும் புகை பிடிக்க ஆரம்பித்தோம் .நாங்கள் புகை பிடித்தது எதோ கற்பை இழந்தது போல் பரவியது.அவனவன் வந்து என் ரூமில் வந்து துக்கம்விசாரித்து விட்டு போனான்.எத்தனையோ உண்மையான அறிவுரை வேறு.போதை தலைக்கு ஏறி போன காலங்கள்.எங்கு விளங்கும் உண்மையும் விளைவுகளும்.
அந்த துணி துவைக்கும் இடத்தின் ஜன்னலில் எப்பொழுதும் ஒரு தீப்பெட்டி ஒளித்துவைக்க பட்டிருக்கும்.எங்கள் கச்சேரி ,வார்டன் தூங்கி ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஆரம்பிக்கும் .அதாவது இரவு படிக்கும் நேரம் முடிந்து நடு இரவில்.எப்பொழுதும் விநேஷும் ,சுப்ரமணிய ராஜா என்பவனும் தான் ஆரம்பிப்பார்கள்.நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொள்ளுவோம் ,படிக்கும் மாணவர்கள் எல்லோரும் முறைத்து விட்டு செல்வார்கள்.

ஒரு சிகரட் ஆளுக்கு இரண்டு இழுப்பு விதம் பத்து பேர் வரை இழுக்கலாம்.இதில் பற்ற வைத்தவன் மட்டும் மூன்று முறை இழுத்து கொள்ளலாம்.இதில் எதாவது சீனியர் வந்து விட்டால் அவன் லேப் எப்பிடி பாஸ் ஆகலாம் அன்று அறிவுரை கூறும் சாக்கில் பாதி சிகரட்டை முடித்து விடுவான்.உண்மையில் எங்களுக்கே தெரியும் அந்த சீனியர் களுக்கு என்னும் முதல் ஆண்டு Chemistry லேப் இன்னும் பாஸ் செய்ய பாக்கி இருக்கிறது என்று.வந்தால் ஆரம்பிப்பதே பீதியுடன் தான் ஆரம்பிப்பார்கள்.
"டேய் வினேஷ் உன் மேல மசின்ஸ் லேப்(Machines Lab) செல்வராஜ் செம கடுப்புலே எருக்கன் பார்த்துக்கோ.டேய் இந்த செல்வராஜ் ஏ டீல்(Deal ) பண்றது ஈசி டா !.கடுப்பாக வரும்.
என்ன செய்வது இப்படியும் எங்களுக்கு சீனியர் இருந்தார்கள்.மிக நாகரீகமான சீனியர்களும் இருந்தார்கள்.ஆனால் அப்படி ஒரு நாகரீகமான சீனியர் செய்த கிண்டலும் கேலியும் தான் என் வாழ்வையே மாற்றி போட்டது.எது எப்படி இருந்தாலும் அந்த துவைக்கும் இடம் பல பேருக்கு போதிமரம்.பல உண்மைகள்,கிசு கிசு,கோபம்,கண்ணீர் ,நன்றி,எடக்கு,திமிர்,பொறாமை எல்லாம் பார்க்கலாம் ஒரு சிகரட் முடிவதற்குள் .இந்த எல்லா உணர்ச்சிகளிலும் ஏதாவ்து ஒரு பெண் இருப்பாள்.அவள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அந்த துவைக்கும் இடத்துக்கு நேர் எதிரில் தான் தொலை பேசி இருந்தது.மாணவர்கள் எல்லோருக்கும் வெளியில் இருந்து அழைப்பு அங்கே தான் வரும்.அப்பொழுது செல்போன் கிடையாது.சென்னையில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் பழியாய் காத்து இருப்பார்கள்.ஏன் என்றால் அப்பொழுது இரவு பதினொரு மணிக்கு மேல் பேசுவதற்கு கால் வாசி தான் கட்டணம்.எனக்கு அழைப்புகள் இரண்டு நாளைக்கு ஒருமுறை வீட்டில் இருந்து வரும் .நானும் கூட்டம் இல்லாத நேரத்தில் அழைக்க சொல்லி பேசி முடித்து விடுவேன்.என் தாயின் குரலில் எப்பொழுதும் நம்பிக்கை தெரியும்.சில மாணவர்களுக்கு பெண்கள் விடுதியில் இருந்தும் அழைப்பு வரும்.சில நேரம் நான் அந்த வழியாக புகை பிடித்து விட்டு செல்லும் போது நானும் சில பெண்களின் அழைபுகளில் பேசி இருக்கிறேன்.ஆனால் அவை எனக்கு வந்தது அல்ல.
"ரூம் No 210 Biju Thomas"
" நீங்க?"
"Friend "
அவ்வளவு தான் அந்த குரல் பேசும்.என்னடா இது இவ்வளவு தான் பேசுவார்களா என்று நினைத்து அந்த தொலை பேசியை அந்த பெண்ணை பார்ப்பது போல முறைத்து விட்டு மல்லாக்க படுக்க வைத்து விட்டு ரூம் 210 Biju Thomas என்று குரல் எழுப்புவேன்.இந்த ஒரு அழைபுக்க்காகவே பிறந்தவன் போல ஓடி வருவான் அடுத்த நொடியில்.இப்படி எத்தனையோ ராமகுமர்கள் ,அஷ்வின்கள்,இப்படி எத்தனையோ பேர்களுக்கு நான் அழைப்பு வந்ததற்கு அழைப்பு விடுத்து இருக்கிறேன் ,ஆனால் எனக்கு ஒரு அழைப்பு கூட வந்தது இல்லை.

ஒருசிலருக்கு வட நாட்டில் இருந்து எல்லாம் அழைப்பு வரும்.அவர்கள் பேசிக்கொள்வது புதிதாக தோன்றா விட்டாலும் வித்தியாசமாக தோன்றும்.அவர்கள் அருகில் காதை தீட்டி வைத்து கேட்டாலும் என்னால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடியாது.அவ்வளவு ரகசியமாக கொஞ்சிகொள்வார்கள்.கொஞ்சி கொல்லவும் செய்வார்கள்பல மாணவர்கள்.அப்படி ஒரு நாள் நான் என் சக தோழன் கிருஷ்ணவேல் உடன் பேசி கொண்டிருக்கும் போது ஒரு குரல்.
"ரூம் நோ 201 போன் " என்று ஒரு குரல்
பெயர் சொல்லவில்லை அந்த குரல்.எனக்கு இருக்காது என்ற நினைப்பில் நான் என் வேலையில் மும்முரமாக இருந்தேன்.என் நண்பன் அறையின் வெளியில் சென்று பார்த்து விட்டு
"டேய் உனக்கு தான்டா !!
"எனக்கா ?
ஆமாண்டா !!
ஒரு வித சந்தேகத்துடன் என் டி ஷர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு சென்றேன்.அந்த அழைப்பை விடுத்தவன் ஒரு வித முறைப்புடன் நின்று கொண்டு இருந்தான்.அவன் ஒரு கேரளத்து மாணவன்.அவனுக்கு அழைப்பு வரும் எனக்கு வந்ததால் கொஞ்சம்கடுப்பாக ஆகி இருக்க வேண்டும்
"ஹலோ"
" எஸ் "
"நான் ஜெனி பேசுறேன்"
"எந்த ஜெனி?"
அந்த ஜெனி என்னை அழைப்பால் என்று நான் எதிர்பர்கவே இல்லை.அந்த குரல் என்னை அழைப்பது போல் இருந்தது.

3 comments:
thalaiva kathai enga poguthu?ana nalla poguthu
Nice backgrounds karthick.. guess mohammed impress u.. thru his PDF.
@ anonymous:
Nandri nanbare ,thangal varugaikku.kathai thaangal ethir parkum edathukku vanthu vidum miga viraivil
@Vinoth
Nanba he has given a great work with that PDF trying to attach the pdf that too.this template was selected by him....
Post a Comment