அந்த ஜெனி யார் என்று எனக்கு பெரிய அளவில் பரிச்சயம் இல்லை.அவளை பற்றி நண்பர்கள் அதிகம் பேசியதாகவும் எனக்கு ஞாபகம் இல்லை.ஆனால் அவள் நடைக்கு வீழாதவர் யாருமே இல்லை.அவள் அழகி இல்லை.

"சொல்லு "
"ஞாபகம் இருக்கா ?
"இல்லாமே என்ன்ன ?"
"இல்ல இந்த பேஷன் ஷோவுக்கு என்னையும் பெயர் கொடுக்க சொல்லி கிரி சொன்னான்!"
"அதுக்கு"
"இல்ல போன தடவை மாதிரி பிரச்சனை வராதே?"
"எனக்கு தெரியலையே !"
"நீ வர்ற இல்ல ?"
"வர்றேன் ஆனா அதுல பொண்ணுங்க இருக்காங்கன்னு எனக்கு இப்ப தான் தெரியும்?"
"என்ன சொல்ற ?"
"ஆமா.நான் பேசிக்கிட்டு உன்னைய கூபிட்றேன்" என்றேன் "
"சரி"
அவள் தொலை பேசியை வைக்க போனதை உணர்ந்தேன்.
"ம்"
எனக்கு வந்த முதல் அழைப்பும் ஒரு வித சுரமும் இல்லாமல் இருந்தது. அன்று இரவே கிரி என்ற சீனியர் ஐ பார்க்க சென்றேன் .அவனிடம்பேசிய பிறகு தான் தெரிந்தது இந்த முறை பேஷன் ஷோவுக்கு ஜோடியாக நடக்க வேண்டும் என்று.
பேஷன் ஷோ என்றால் அழகாய் இருப்பவன் தான் போவான் என்ற தப்பான எண்ணம் எல்லோர் மத்தியிலும் நிலவியது.அதற்கு எதுவும் செய்ய முடியாது.நான் என் கல்லூரியில் பேஷன் ஷோவில் கலந்து வந்தேன்.ஆள் இல்லாமல் என்னை தேர்வு செய்தார்களா இல்லை நான் அவர்களுக்கு தேவைக்கு கச்சிதமாக இருந்தேனா என்னவோ தெரியவில்லை ஆனால் நான் அந்த அணியில் எப்பொழுதும் இருப்பேன்.
சில நண்பர்கள் அந்த அணியில் எல்லோரும் என்னை விட பன்மடங்கு நிறமாக இருப்பதால் என்னை கேலி கூட செய்வார்கள்.
" என்னடாமச்சி நீ என்ன திருஷ்டி பொட்டா?"
நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் ,! எனக்கே அந்த சந்தேகம் இருந்து வந்தது
ஜெனி வருவுக்காக நான் அவள் துறை அருகில் சென்று காது இருந்தேன்.அவள் என்னை கடந்து போனது எனக்கு எனக்கு தெரிந்தது ஆனால் என்னால் அவளை கூப்பிட முடியவில்லை.ஏன் என்றால் என்னை சுற்றி என் நண்பர்கள் .அவர்களிடம் இருந்து தனியாக வந்து அவளிடம் பேசினேன்.

"அவளும் அதே தடுமாற்றத்தில் இருந்ததாள்
" நான் உனக்கு கால் பண்றேன் " என்றாள்
"இன்னிக்கி நான் ஊருக்கு போறேனே "
"வீட்டுக்கு கால் பண்றேன் "
"வேறு நம்பர் தெரியுமா ?"
"கொடு "
"0462 2531001"

சனிக்கிழமை வந்து நான் தூங்கி விட்டேன் .காலை என் தந்தை
" டேய் யாரோ டின் டா போன் ல வெயிட் பண்றா , போ !" என்று எழுப்பினார்
நானும் தூக்க கலக்கத்தில்" ம்"
"குட் மார்னிங் "
"குட் மார்னிங் என்ன இப்பவே கூபிட்டுடே
" சும்மா தான் தப்பா ?"
" இல்ல "
தப்பு தான் நான் அன்று அவளிடம் பேசுவதற்கு ஆயத்தம் ஆகவே இல்லை. எங்கள் பேச்சு எதிலோ ஆரம்பித்து அடுத்த வாரம் மதுரைக்கு சென்று மாப்பிளை விநாயகர் திரை அரங்கில் படம் பார்க்க பிளான் போடும் வரை வந்தது.இதனையும் நான் பல் கூட விலகாமல்.பார்த்து கொள்ளலாம் எங்கள் உரையாடல் எவ்வளவு நாற்றம் பிடித்ததாக இருந்து இருக்கும் என்று.அந்த ஒரு வாரம் அவள் என்னை கண்டு கொள்ளவே இல்லை ,எனக்கு சந்தேகம் இவள் தான் நம்முடம் பேசினாளா என்று ஆனால் சரியாக வெள்ளிக்கிழமை இரவு மணி ஒலித்தது.

" சண்டே நான் சர்ச் போய்ட்டு வெளிய நிக்கிறேன் நீ வந்துடு " என்றாள்
"ரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில இருக்கு இல்ல அது தான்."

" ம் " என்று போனை வைத்தேன்.
நீ காலி என்று எனக்குள் சொல்லி கொண்டே சென்றேன்.சரியாக 11 மணிக்கு அவள் வெளியே வந்தாள்.
"இதுக்கு மேல எங்க போறது." என்று அவளை பார்த்து கடுபனேன்
"பிரிட்டிஷ் பேக்கரி போலாம்" என்றாள்
"சரி வா "எங்கப்பா வரதுக்கு அயிநூறு ரூபாய் கொடுத்து இருந்தார்,அது எங்கே எங்கே சரியாக இருக்கும் என்று போன வாரமே அப்பாவிடம் ஒரு ஏறண்டைய்ரம் ரூபாய் ஒரு சின்ன கதை சொல்லி வங்கி வைத்து இருந்தேன்.
ஆளுக்கு ஒரு கேக் வாங்கி கொண்டு அருகில் உட்கார்ந்தோம்.அவளிடம் எல்லாவற்றிலும் ஒரு ஆடம்பரம் தெரிந்தது.அவசரமும் தெரிந்தது.தனிடம் எந்த அனும பேச வில்லை என்ற ஏக்கமும் தெரிந்தது.அதற்கு காரணம் மேல் கூறியவை தான் என்றும் தெரிந்தது.அவளது குணத்தையோ அவள் எப்படி என்பதை பற்றியோ நான் தெரிந்து கொள்ள அரவம் காட்டவே இல்லை.அவளும் கேட்கவில்லை சொல்லவும் இல்லை.ஏதோ ஒரு எண்ணத்துடன் வந்தது புரிந்தது.நான் ஏன் கேட்டு காரியத்தை கெடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
மதியம் இரண்டு மணி போல் நாங்கள் திரை அரங்கிற்குள் நுழைந்தோம் .அவள் இன்று எனக்கு மிக அருகில் அமர்ந்து இருகிறாள்.எனக்கு எப்பொழுது பெண் வாசம் பழகி விட்டது போல் தோன்றியது." அவேங்கேர்ஸ்(Avengers) " என்ற திரைப்படம்.படம் எனக்கு பார்க்க இஷ்டம் இல்லை ,அவளிடம் ஒரு சில சாதாரண ஜோக்குகளை சொல்லி பெரிய சிரிப்பை வாங்கி கொண்டிருந்தேன்.அவள் மேல் என் கைகள் படும் போது எல்லாம் அவள் ஒண்ணும் பெரியதாக அலட்டிக்கொள்ள வில்லை.நான் முன்னேறி விட்டேன்.

சௌபர்நிகா வுக்கு பிறகு ஜெனி .என் மனதில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது.சில பெண்கள் உன்னிடம் வீழ்ந்து இருக்கிறார்கள் இன்று.எதுவும் நடக்காதது போல் கல்லூரிக்கு சென்று விட்டோம்.அடுத்த பல வரங்கள் அவளிடம் இருந்து தொடர்பே இல்லை.

என் மனம் கொஞ்சம் ஒழுங்காக இருக்க சொல்லி வற்புறுத்தியது.சில உறவுகளில் உணர்ச்சிகளே இருப்பது இல்லை அது போல் தான் ஜெனி வும் .என் மனம் திருந்த சொன்னாலும் என் நிலை என்னை திருந்த விட வில்லை ,ஒரு வினிதா vanthu சென்றால் அவள் பேசுவதோடு நிறுத்தி கொண்டாள் ,பிறகு ஒரு லக்ஷ்மி வந்து சென்றாள்,அவள் பேசவே இல்லை அனல் ஏதோ அவள் மேல் ஒரு மயக்கம் இருந்தது.ஆனால் எங்கும் நான் தங்கி விடவில்லை ,பயணி போல் இருந்தேன்.சில இடங்களில் இளைபாறினேன் ,சில இடங்களில் வேட்டை ஆடினேன்.
இன்றும் நான் பயணி தான் ,என் தேடல் முடிந்து போய்,பொய்யாகி போன கதை.ஆனால் எனக்குள் என்னும் பல நினைவுகள் அழிந்து விட்டாலும் ஒரு நினைவு என்னை உறங்கவும் விடுவது இல்லை .விழித்து இருக்கவும் முடியவில்லை. அனைவரும் rayilil உறங்கி விட்டார்கள் ,அந்த N.S.S ஜோடியை தவிர.இருட்டுக்குள் ஏதோ தேடி கொண்டிருந்தர்கள் ,உரசி கொண்டு இருந்தார்கள்.நான் வருவதை பார்த்து விட்டு
" உட்கார போறீங்களா ?
"இல்லை உட்கர்ந்துகோங்க எனக்கு டைம் ஆகும் ! "
அவர்கள் நடு மற்றும் மேல் இருகைகள்.அதனால் அவர்களுக்கு எங்கட இவன் வந்து கச்சேரிய கெடுத்து விடுவனோ என்று பயம் .அவர்களை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.என் நினைவுகள் என்னை தொந்தரவு செய்யும் போது அடுத்தவனை தொந்தரவு செய்ய எங்க எனக்கு திறன் உண்டு.கொஞ்ச நேரம் IPOD கேட்கலாம் என்று எடுத்து மாட்டினேன்.

" பிரபு நீ என்னைய தேடி இருப்பன்னு தெரியும் !
நானும் அம்மாவும் தூரத்தில் இங்க மகாராஷ்திராவில் மாமா வீட்டில் இருக்கோம்.எனக்கு ஏத்த சமயம் வரும் போது சொல்றன்,நேரத்துக்கு சாப்பிடு ,வாரத்துக்கு மூணு நாலாவது குளி,அந்த சாக்ஸ் ஏ தொவட்சு போடு ,நகம் கடிக்காத ,கடவுள வேண்டிக்கோ , "
-ஆனந்தி
"ஆனந்தி"அந்த பாடல் அந்த முறை அப்பொழுது என் மணி பர்சை(PURSE) தேட சொல்லியது . அது ஏன் என்று சொல்ல வேண்டும் என்றால் பல வற்றை நான் நினைக்க வேண்டும். எனக்கு நன்றாக தெரியும் என் மணி பர்ஸ் என்னை பல விஷயங்களை தேட சொல்லும் என்று.என் பர்சை நான் பணம் மற்றும் கார்டுகள் எடுப்பது தவீற மாற்ற எந்த விஷயத்துக்கு எடுத்தாலும் அன்று எனக்கு சங்கு தான்.அதாவது என் நாள் அன்று ஸ்தம்பித்து விடும் .அதை நான் விரும்பவில்லை.
என் பர்சுக்குள் மற்றவர் வைத்திருக்கும் விஷயங்களை தவிர அதில் ஒரு பாரதியார் படம் ,ஒரு விநாயகர் படம் ,ஒரு கிழிந்து போன பிளாட் பாரம் டிக்கெட் , இரண்டு பேருந்து டிக்கெட்டுகள்,இரண்டு சினிமா டிக்கெட்டுகள்,இரண்டு ரத்ததானம் செய்த சிறிய கார்டுகள் அது தவிர கிழிந்து போன பிளாட் பாரம் டிக்கெட் ,அவள் புகை கொண்டு இருக்கும் ஒரு படம்,அவள் எனக்கு எழுதிய கடிதம்!
என்னை விட்டு வெகு தூரம் அவள் சென்று விட்ட பிறகும் இந்த உலகத்தில் அவள் கடிதங்கள் என்னிடம் தினம் அவளாக பேசி கொண்டு தான் இருக்கின்றன.

3 comments:

Vinoth Pradeep said...

In this world many loveables of me still talk to me thru their words.. i can really see them thru that ( autograph's, letters.. etc..)Hope same to u too.. For me it was/is friends.. For you???

Atlest may god bless you for the (nth)next time

Karthik said...

There is no nth time here.The thing is finite.It was a friend,love,every thing what ever u name it .But it was a relation which the character in here is and will and was celeberating.This not a autograph ofcourse...
:)

Keshi said...

Happy New Year Karthik!

Keshi.