அவள் வந்தாள் .நான் யார் ??

என் பெயர் கிருஷ்ணா ,மிக எளிய பெயர் .நான் ஒரு பட்டதாரி.இத்தனை நிமிடங்கள் நான் பேசி கொண்டிருக்கும் போதும் நான் என் பெயரை உச்சரிக்கவே இல்லை.நான் இன்று சிலவற்றை மறந்து சிலவற்றை துறந்து என் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறேன்.இல்லை மறந்தவையும்,
துறந்தவையும் என்று என் வாழ்கையை நகர்த்தி கொண்டிருக்கிறது.நான் மேற்குறிய எந்த நினைவுகளும் என்னை தொந்தரவு செய்தது இல்லை.பல மனிதர்களை போல் நானும் மோகம் ,நேசம்,இனம் புரியா ஈர்ப்பு இவைகளை தாண்டி காதலித்தேன்.

எனக்கு இந்த உலகமும் உறவுகளும் கற்று கொடுத்த பாடங்கள் தான் நான் வாங்கிய மிக பெரிய பட்டம் ,பதவி.ஆனால் இன்றும் என் கணிப்புகள் பொய்யாகி காற்றோடு தான் போகின்றன .நான் காமம் ,நேசம் ,மோகம் ,அரவணைப்பு என்று செய்த எல்லா அற்ப காரியங்களுக்கும் "தேடல்" என்று பெயர் சூட்டி இருந்தாலும் என் இளமை எதோ ஒரு ஜீவனுக்காக ஏங்கி இருந்தது.அத்தனை செயல்களும் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. நானும் ஒரு பெண்ணை காதலித்தேன்.எங்கோ படித்த நினைவு "காதல் அற்புதமானது ,அது பிறக்கவும் ,அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதுமானது." என் காதல் ஆரம்பித்து அழிந்த்தும் அப்படிதான் .ஆனால் என் காதல் அழகியது.கட்டுக்கு அடங்காமல் இருந்த ஒரு மிருகத்தை ஒரு கோட்பாட்டுக்குள் கொண்டு வந்ததது என் காதல் .

கிருஷ்ணா மாறி விட்டான் என்று என் நண்பர்கள் கூறும் அத்தனை கூற்றுகளுக்கும் என் காதல் தான் காரணம் என்று சொன்னால் சொன்னவன் அத்தனை பெரும் தேவை இல்லாமல் சொல்லிவிட்டோமோ என்று நினைப்பான் .
எனக்கு கோபம் வரும் ,கொஞ்சம் தான் அறிவு,வாய் கிழிய பேசுவேன்,சம்பந்தம் இல்லாமல் கதை கட்டுவேன் ,பொய் உண்மையை விட அதிகம் இனிக்கும் என்று நம்பியவன், பெண்ணை பெண்ணாய் பார்க்க தெரியாதவன்.இன்று எனக்குள் இவை எதுவும் இல்லை .அடித்து சொல்லுவேன் என் நிலை மாறிவிட்டது.

அன்று நான் மாறினேன் என்று சொல்லுவதை விட எனக்குள் மாற்றங்களை நான் உணர்ந்தேன்.என் மாற்றங்கள் எவனுக்கும் தெரிவதை விட எனக்கு வெளிச்சமாக தெரிந்தது.

என் பர்சுக்குள் இருந்த கடிதத்தை எடுத்தேன் !!!

" கிருஷ்ணா ,என்ன பண்ணிக்கிட்டு இருக்க!

How are u i am not fine .

உனக்கு வேலை கிடைக்கும் கவலை படாதே ,அந்த Hexaware என்ன ஆச்சு ரிசல்ட் வந்துச்சா ,

எனக்கு இங்க யாரையும் பிடிக்கவில்லை ,சீக்கிரம் வா.அந்த examination hall படி எல்லாம் நீ எல்லாம என்னவோ மாதிரி இருக்கு.எனக்கு ஒரு RS.250 அனுப்பி வை.உனக்கு போன் பண்ண தான். என்னால வீட்டுல வாங்க முடியல .சில விஷயங்களை நான் உன்கிட்ட சொல்லணும் .நேர்ல சொல்றேன் .மொட்டை போட்ட்ருக்கன்னு சொன்ன இல்ல,தயவு செய்து தொப்பி போட்டுட்டு வெளில போ.என்னைய பார்க்க வரும் போது தொப்பி இல்லாம வராதா.


பாம்பே போறன்னு சொன்ன ,நீ ஏன் என் நிலைமைய புரிஞ்சுக்க மாட்டிக்கிற.நீயும் பாம்பே போய்ட்டா அப்புறம் எங்கப்பா என்னைய சீக்கிரம் பிரிச்சுருவார்.
நிறைய பிரெஷ் ஜூஸ் குடி ,அப்புறம் என்ன படம் பார்த்த ? நான் மௌனம் பேசியதே படம் பார்த்தேன்.


போன வாரம் அம்மாவோட ஹஜீமொசா கடைக்கு போயிருந்தேன்.அந்த கடைக்காரன் என்னைய பார்த்து அம்மா கிட்ட " உங்க பொண்ணுக்கு கல்யாண வயசு வந்தாச்சு ன்னு சொன்னான் .அப்பிடியா கிருஷ்ணா.? எனக்கு பயமா இருக்குடா ? ஏன் தான் நீ ஒரு வருஷம் காலேஜ் சீனியர் ஆகி போன ?

அப்புறம் சிகரட் குடிக்காத,இந்த வாரம் குங்குமம் ல போட்ட்ருந்தான் " சிகரட் குடிக்கும் போது அயுள்ள 7.5 செகண்ட் குறையுதாம் ! நீ என்னைய விட்டு போற !! பார்த்துக்கோ.

நீ என்னை விட்டு போனாலும் எனக்குள்ள அந்த older days எல்லாம் தான் என்னைய occupied ஆக வைத்து இருக்கிறது.எனக்கு என் பழைய கிருஷ்ணா வேணும்.அந்த தோள் வேண்டும் ,உன் கூட பஸ்ல போகும் போது சாஞ்சிகிட்டு என் துப்பட்டாவை வைச்சு நான் என் முகத்தை மறைட்சுகனும்,

பணம் அனுப்பு ,reply அனுப்பு ,அப்புறம் என்னால தினமும் போன் பண்ண முடியாது ,அங்க ரொம்ப கூட்டம் ஆக இருக்கு.அப்புறம் ஏற்கனவே என்ன எல்லோரும் உன்னைய வட்சு கிண்டல் பண்றாங்க .நீ இல்லைனாலும் உன் பேர் அடிக்கடி கேட்டு கிட்டு தான் இருக்கு.இப்ப எல்லாம் நான் அடிடோரீஇயம் பக்கம் போறதே இல்ல.
எனக்கு உன்னை பார்க்கணும்னு இருக்கு.

I am not able to study,dont love me too much

Love u

Urs vidhya

Open with smile :::

Guess who

2 comments:

Vinoth Pradeep said...

you too brutus.. Fell in true love?..
nice one.. especially the girl's words.. typical tamil girl.. :)

keep Going

Karthik said...

Nandri nanba...I want to tell you..the whole episode of this writing was motivated only because of this.So it should take off from here to know why and how....!Which will also give me some answers for !!!