அவள் பெயர் வித்யா .அதுவே சுருக்க பட்ட பெயர் நான் என் வசதிக்காக இன்னும் சுருக்கி வித்தி ஆக்கி கொண்டேன் பின் நாளில் .அவள் எனக்குள் என்னும் அழகாய் சிரித்து கொண்டிருக்கிறாள் .அழகாய் என்னை ஆட்சியும் செய்து கொண்டிருக்கிறாள்.அழகு என்றுமே ஆட்சி செய்யும் .இத்தனை சொன்ன பிறகும் சொல்ல வேண்டுமா அவள் அழகு என்று.
அன்று நானும் என் சீனியர் கிரியும் பேஷன் ஷோவுக்கு கலந்து கொள்ளும் பெண்களை பார்க்க சென்றோம் .பல பெண்கள் வராண்டாவில் எங்களுக்காக காத்துகொண்டிருந்தார்கள்.ஆனால் ஏதோ ஒரு ஆதாயத்துக்காக .எந்த பெண்ணையும் பார்க்க இஷ்டம் இல்லாமல் சென்ற எனக்கு அந்த பெண்களில் அபாய அசைவுகள் என்னை கிளறி விட்டு கொண்டிருந்தது.அசையாத மனமும் அசை போடும் அந்த அசௌகரிய அசைவுகளில்,கிரி பெண்களிடம் சுலபமாக விளையாடி கொண்டிருந்தான்நான் விலகி விண்வெளியை ரசிக்கும் படகோட்டி போல் பயணித்து கொண்டிருந்தேன்.பயணம் எனது,ஆனால் தூரம் நின்று ரசிக்கும் வானம் எனது அல்ல.
" இவ தான் எங்க (Tall)"
" ம் "
"கிருஷ்ணா உன் பர்டனரை பார்த்துக்கோ " என்றான் கிரி
நான் பெண்ணை பார்க்க தெரியாதவன் போல் மேல் இருந்து கீழ் வரை பார்த்தேன்
"நீங்க EEE தானே ?"
"அவ உன் ஜூனியர் டா "' என்றாள் ஒரு பெண் .
எனக்கு அந்த டா பிடிக்க வில்லை .அவளுக்கு தெரிவது போல் என் முகத்தை நான் இறுக்கி கொண்டேன்.உணர்ந்தவள் போல் அவள் கிரியுடன் பேசி கொண்டாள்.
அந்த ஜூனியர் வித்யா .என் வாழ்வின் எல்லைகளை வரைந்து " இது தான் உன் உலகம் நீ என்னை தாண்டி எங்கும் செல்ல முடியாது " என்று என்னை ஆட்டுவிக்க போகிறவள் என்ற சுவடே இல்லாமல் அப்பாவியாக அந்த கூட்டத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.என் அத்தனை சந்தோஷங்களையும் ஒரு சேர கொடுத்து"வாழ்கையே நான் தான் கவலை கொள்ளாதே ,"என்று சொல்லி தாலாட்டி பின் என் சுவாசம் முதல் என் நிழல் வரை நிம்மதியை கிழித்து எரிந்து போன பெண்ணா அவள் என்று நினைத்தால் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
அந்த பேஷன் ஷோ நல்லபடியாக முடிந்தது.நாங்கள் வாகை சுடினோம் .எங்கள் இருவருக்கும் ஒன்றும் பெரிய அலைவரிசை இல்லை .
அவள் மதுரையில் உள்ள பெரிய நகை கடை முதலாளியின் பெண் என்பதால் அனைவரும் அவளிடம் நெருங்கவே யோசித்தார்கள்.நான் அந்த யோசனையில் கலந்து கொள்ள வில்லை ,என் எண்ணம் எல்லாம் ஜெனிலீண்ட விடம் இருந்தது.அவளும் அந்த பேஷன் ஷோவுக்கு வந்து இருந்தாள்.வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அவளை ஒரு முறை அணைத்து கொண்டேன்.
வித்யா கொஞ்சம் தனியாகவே இருந்தாள் ,அவள் தனியாக இருப்பதே கொஞ்சம் பார்பவரை ரசிக்க வைக்கும்.பேருந்திலும் அதிகம் பேச வில்லை,நான் ஜெனிளிண்டா விடம் பேசி கொண்டு வந்தேன்.அவள் வித்யாவின் அருகில் அமர்ந்து இருந்தாள்.
அடுத்த நாள் அவளை என் துறை வராண்டாவில் சந்தித்தேன்.ஹாய் என்றேன்ஹாய்அந்த சங்கலிய நான் நாளைக்கு தர்றேன் பரவா இல்ல அவளிடம் ஒரு சங்கிலியை வங்கி இருந்தேன் ,நான் பாரம்பரிய உடையில் தோன்றியதால் ஒரு சங்கிலி அணிவது அவசியம் ஆனது.
அடுத்த நாள் அவளை காத்திருக்க சொல்லிவிட்டு நான் சங்கிலியை கொடுக்கலாம் என்று நினைத்து இருந்தேன்.அவளிடம் காலையே சொல்லி இருந்தேன் .அவள் மாலை எனக்காக ஒரு மணி நேரம் காத்து இருந்தாள் .நான் வேறு ஒரு வேளையில் மாட்டி கொண்டதால் கொஞ்சம் தாமதமாக வந்தேன் .அந்த ஒரு தடவை தான் எனக்காக அவள் காத்திருந்தது,அன்றைய பொழுதில் இருந்து தலை கீழ் ஆகி போனது சோகம்காத்திருப்பது சோகம் ,காதலில் அது சுகம் ," எவனும் சொல்ல வில்லை நான் சொல்லியது.
வாழ்க்கை மாறி விட்டது,காலம் கடந்து விட்டது.ரயிலும் திருச்சி வந்து சேர்ந்தது .

2 comments:
என்னால் ஒன்று மட்டும் ஜீரணிக்க முடியவில்லை நண்பா... " காதலர்கள் ஏன் காதலை தூசதிசமாய் விடுகிறார்கள் ..."
nanba ...Puriyalaye
Post a Comment