என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை,தூக்கம் வரவில்லை,புகை பிடிக்கவும் முடியவில்லை .ஒரு போலீஸ் காரன் அந்த வாசலில் அமர்ந்து கொண்டு தூங்கி கொண்டு இருந்தார்.அருகில் சென்ற போது தான் அவர் குடித்து இருந்தார் என்று தெரிந்தது.என் மனம் இப்பொழுதெல்லாம் மிக மெதுவாகவே எண்ணுகிறது.எண்ணம் என்னை கொஞ்சம் மந்தமாக்கி விட்டது.இப்பொழுது அவள் திரும்பி வந்தால் கூட அவளால் பழைய கிருஷ்ணாவை பார்க்க முடியாது.அவள் வித்தியாசத்தை உணர்வாள்,ஆனால் என் மனதில் ஒன்று மட்டும் ஒழுங்காக நடக்கிறது ஒவ்வொரு எழு நிமிடத்திற்கு ஒரு முறை அவளை நினைத்து கொண்டோ அல்ல எதாவது சம்பந்த படுத்தி கொண்டோ இருக்கிறது.எனக்கு இந்த நிலை பிடிக்கவில்லை தான்.
என் நண்பனுடன் ஒரு நாள் மது அருந்தி கொண்டிருந்தேன்,என்னவோ கணக்கு அதிகமாகி போனதால்,நான் கொஞ்சம் தடுமாறி கொண்டிருந்தேன்.
" கிருஷ்ணா போதும் டா " என்றான் என் நண்பன் சிராஜ்
டேய் நீ ஏன்டா வருத்த படுற ,வருத்த பட வேண்டியது அவள் " என்று typical குடிகாரன் போல் உளறினேன் .எனக்கு தெரியும் நான் உளறவில்லை என்று.அனால் ஏதோ ஒரு சந்தர்ப்பம் போல் என் சோகத்தை மைக் வைத்து கத்தி விட்டேன்.ஏன் நான் எப்படி நடந்து கொள்கிறேன்.என்னை அவள் பிரிவு அவ்வளவு பாதித்து விட்டதா.இல்லை நான் பாதித்தது போல் நடித்து அனுதாபத்தை சம்பாதித்து கொள்கிறேனா ? யாராவது நான் வருத்த படுவதை பார்த்து அவளிடம் சென்று அவளுக்கு புரியவையுங்களேன் ? ஏன் ,எனக்குள் இந்த அசிங்கமான எண்ணம் .உண்மையில் அப்படி இருக்க கூடாது என்று அடிக்கடி நினைத்து கொள்கிறேன்.
ஆனால் சில விஷயங்கள் முதல் போல் அல்ல மறந்து விடுகிறது,எப்படி தான் அவளை முதலில் வெளியே அழைத்து சென்ற நாள் கூட போன வருடம் மறந்து விட்டது.மற்றவர்களிடம் நான் சொல்ல முடியாது ஆனால் எனக்கு அது தேவையாக பட்டது.
சக்தியும் விஷாலும் கிண்டல் செய்த பிறகு அவள் என்னை அதிகமாக பார்க்கவில்லை .பார்த்தால் ஒரு சிரிப்பு அவ்வளவு தான்.அவள் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவள் விலகியே இருந்தாள்.இந்த சமயத்தில் என் வகுப்பில் ஒருவன் அவளை காதலித்து கொண்டிருந்தான்.எனக்கு அது முன்னதாகவே தெரியும் .அவன் பெயர் ஜெகன்.
ஒரு நாள் மாலை நான் நடந்து வரும்போது ஒரு மறைவில் நின்று கொண்டு பேசி கொண்டிருந்தார்கள்.அவர்கள் பேசிய மொழி எனக்கு புரியவில்லை .தெலுங்கு என்று நினைக்கிறேன்.என் அம்மா தெலுங்கு பேசி நான் கேட்டு இருக்கிறேன்.அவளும் அவனும் பேசியது எனக்கு பிடிக்கவில்லை.அந்த அசைவுகள் என்னை கொஞ்சம் வெறுப்பு ஏற்றியது.அவளும் அவனும் நான் வருவதை ஒரு முறை பார்த்து விட்டு தொடர்ந்தார்கள்.அந்த பார்வை எனக்கு அவனிடம் இருந்து ஏதோ ஒரு சாதனையை செய்து விட்டது போல் வலியுறுத்தியது.நான் திரும்பி வந்து தூங்கி விட்டேன் .அன்று இரவில் நான் வெளியே சென்று சாப்பிடலாம் என்று என் நண்பன் தம்பிதுரையுடன் சென்றேன்.அவன் ஜெகன் அறை வரை சென்று வருவோம் என்று சொல்லியதால்,நாங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு சென்றோம்.
ஜெகன் மதுரையில் இருந்து வருவான்,அவன் சகாக்கள் கல்லூரி அருகே தங்கி இருந்ததால் அவனும் அடிக்கடி அங்கே தங்கி விடுவான்.அந்த சகாக்கள் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை ஆனால் தம்பி துறை அடிக்கடி சென்று வருவான்.
உள்ளே நுழைந்த வுடன் என்னை பல வார்த்தைகளில் வரவேற்று அமர வைத்தான் ஜெகன் .அவன் குடித்து இருந்தான்.பின்னாடி ஏதோ சோகமான மோகன் பட்டு ஓடி கொண்டிருந்தது.
" ஏன்டா நீ வித்யாவுடன் ஒரு ஷோ நடந்த நீங்க எப்பவுமே அவங்களோட நடப்பீங்களா ,அவள் மாமுவுக்கு சொந்தம் தெரியும் இல்ல !" என்று சண்டைக்கு வந்தான் அவன் நண்பன் ,எனக்கு பிடிக்க வில்லை அவன் பேசியது.
ஜெகன் ஏதோ என்னை முறைத்து கொண்டிருந்தான்.நான் என் மனதில் அவளுக்கு இன்னும் இடம் தரவில்லை.ஆனால் அவனிடம் சண்டை போட எனக்கு இஷ்டமும் இல்லை .
" டேய் கிறுக்கன் மாதிரி பேசாத,ஜெகன் நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ எனக்கு ஒரு மயிரும் கவலை இல்ல என்ன புரியுதா.?" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து வந்து விட்டேன்.
அடுத்த நாள் முதல் நான் அவளை திரும்பி கூட பார்க்க வில்லை ,ஜெகனால் வித்யாவின் அழகை கை கொள்ள முடியாது என்று எனக்கு தெரியும் ஆனால் அவன் மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.அவள் அவனிடம் தினமும் பேசி கொண்டிருந்தாள் ,நான் அதை ஒன்றும் போற்படுதவே இல்லை.எனக்கு அந்த சமயம் ஜெனிலீண்டா முக்கியமாக தெரிந்தாள்.ஆனால் சில நேரம் வித்யா என்னை பார்ப்பது போல் தோன்றும் ,நான் திரும்ப மாட்டேன் .
மதாம் இரண்டாகியது .நான் இந்த களேபரத்தை மறந்தே போய் இருந்தேன் .ஒரு நாள் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு வரும்போது என் அறை அருகே ஒரு ஜூனியர் மாணவன் நின்று கொண்டிருந்தான்.அவன் எதற்கு நிற்கிறான் என்று எனக்கு தெரியாமல்
"என்னடா இங்க?"
"இல்ல ஒண்ணும் இல்ல ! என்று முழித்தான் .அவன் பெயர் காளி என்று நினைக்கிறேன்
மறுபடியும் " வித்யா கொடுத்தாள் .உங்களுக்கு" என்று ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு சென்று விட்டான் .
அவன் சென்று விட்டான் என்பதை கூட பார்க்காமல் அந்த கடிதத்தை பிரித்தேன் ,அது ஏற்கனவே படிக்க பட்டு இருந்தது.
" கிருஷ்ணா !
How are u ,u are not speaking to me ,why is it so Jegan used to tell u are so arrogant,i used to ask him ,Any ways how are u preparing for the exams.classes are boring so much.,I am leaving to bangalore tonight,we are going to buy marbles for our new house.see you on monday
with luv
vdhya .A"
அந்த கடிதம் எதற்கு என்று புரியவில்லை ,ஆனால் அது தான் பிள்ளையார் சுழி என்று அப்பொழுது விளங்கவும் இல்லை.ஆனால் நன்றாக இருந்தது,வித்யா அழகாக அவள் பிழைகளுடன் உள்ள கடிதத்தின் மூலன் என் மனதுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

3 comments:
Karthik,
Why dont u post daily two episodes?
Nice one.
Regards
Hussain
machi
ithuve konjam kashtama thaan erukku
i am making it though
:)
எழுத்து பிழை இல்லா இந்த கவிதையில்... அவளின் கடித வார்த்தைக்கு பிறகு ஒரு எழுத்து பிழை.. அதை நீ கவனித்யா?...
ஓர் உண்மை சொல்கிறேன் கேள்... அவள் உன் எழுத்துகளை இப்பொழுது படித்தாலும்.. இல்லாவிடிலும்..
உனை மறக்க மாட்டாள்... உன் வார்த்தை வழியாக அவள் உன்னை பார்த்து கொண்டுதான் இருக்கிறாள்...
Post a Comment