அந்த பொழுதுகள் எனக்கு அதிகமாக ஞாபகம் இல்லை.ஆவலுடன் முதல் மாதம் நான் என்ன பேசினேன் என்று நான் அடிக்கடி யோசித்து பார்ப்பேன் ,ஆனால் ஞாபகம் வருவதில்லை.உண்மையில் அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது,ஏன் என்றால் அவளுடன் நான் பழக கொஞ்சம் தயங்கினேன்.காரணம் பல ஒன்று அவளை மற்ற பெண்கள் போல் என்னால் பார்க்க முடியவில்லை ,இரண்டு அவளை வேறு ஒருவன் காதலித்து வந்தான் ,மூன்று அவளுடன் பழகினால் என்னக்குள் பல மாற்றங்கள் நிகழும் என்பதனால் ,உண்மையில் மூன்றும் நடந்தது.அவளை நான் முடியாமல் தவிர்த்து வந்தேன்.அந்த தவிர்ப்புக்கு அவள் தவிப்புகள் ஏன் கண் முன்னே தெரிந்தது.

அந்த சமயங்களில் ஜெனிலீண்டா என்னுடன் போன் தினமும் பேச ஆரம்பித்து விட்டாள்.அவளுடன் வெளியே சென்று நாள் ஆகி விட்டது என்பதால்,நான் கொஞ்சம் அவளிடம் பேசுவதில் கொஞ்சம் அக்கறை காட்டினேன்.அவளும் ஒரு நாள் என் மீது அதிகமாக பிரியம் வைத்து இருப்பதாக சொன்னது எனக்கு கொஞ்சம் யோசிக்க வைத்தது. ஒரு சனிக்கிழமை நான் ஜெனிலீண்டா வுடன் பேசி கொண்டிருந்தேன். போனில் பேச்சு வார்த்தை காலை தொடங்கி மதியம் வரை தொடர்ந்து கொண்டு வந்தது.அவளும் ஏதோ ஏதோ முட்டாள் தனமாக பேசி வந்தால் நானும் அவளுக்கு கொக்கி போட்டு கொண்டிருந்தேன்.திடீர் என்று எனக்கு செகண்ட் கால் வருவது போல் இருந்தது.ஜெனிலீண்டாவை கொஞ்சம் காத்திருக்க சொல்லிவிட்டு நான் அடுத்த அழைப்பிடம் பேசினேன்.

" ஹலோ "
"ஹலோ வித்யா பேசுறேன் "
எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை ,ஜெனிலீண்டாவிடம் ஒரு சில மாற்றங்கள் தெரியும் சமயத்தில் இவள் மீது எனக்கு மனம் கொள்ளவில்லை.
"வித்யா நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன் ,ஜெனியோட பேசிகிட்டு இருக்கேன் "என்று போனை துண்டித்து விட்டு ஜெனிலீண்டாவுடன் பேச தொடர்ந்தேன்.ஒரு இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் வித்யா செகண்ட் கால்

அதே பதில் என்னிடம் இருந்து.மோகம் உண்மையான காதலை தவிர்த்து கொண்டிருந்தது.கொடுமையான நேரங்கள்.அவளும் ஒன்றும் சொல்லாமல் போனை வைத்து விட்டாள்.பல மதங்கள் ஓடி விட்டன ,ஜெனிலீண்டாவும் நானும் பேசுவதே இல்லை.என் அப்பா அடிக்கடி என்னை கிண்டல் செய்வது கொஞ்சம் வெறுப்பு ஏற்றியது.வித்யாவும் என்னை கூப்பிடுவது இல்லை.
கல்லூரியில் ஏனோ மனம் கொள்ளவே இல்லை,வித்யா என்னை பார்த்து தினம் புன்னகை சிந்தி கொண்டு தான் இருந்தாள் ஆனால் ஏனோ என் மனம் தான் அதை எடுத்து கொள்ள தயங்கி கொண்டிருந்தது.அன்று மாலை நான் கல்லூரி விடுதியில் கூட்டமாக அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்து கொண்டிருக்கும் போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது.

"கிருஷ்ணா உனக்கு தான்,டேய் கலக்குறே "
ஒரு கூச்சலாக இருந்ததால் எனக்கு ஒன்றும் கேட்க வில்லை.
" யாரு "
" வித்யா பேசுறேன் "
"என்ன வித்யா "
"ஒரு முக்கியமான விஷயம் பேசணும் !"
"சொல்லு "
"இப்ப இல்ல சனிக்கிழமை ஒருக்கு போறீங்க இல்ல ?"
"ஆமாம் "
"நான் கூபிடறேன்"
" சரி"
அவள் குரலில் பல ஏக்கங்கள் தெரிந்தது.அவள் அழுது விடுவாள் போல் இருந்தது,நானும் பேச்சு கொடுக்க வில்லை.சனிகிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தது.அந்த நான்கு நாட்களும் அவள் பார்வை என் மீது மையம் கொண்டிருந்தது.அடிக்கடி எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டு கொண்டிருந்தது.என் நடவடிக்கைகள் அவள் முன் கொஞ்சம் சாந்தமாக இருந்தன .எனக்கு என் மாற்றங்கள் புரிந்தது.ஆனால் எனக்கு மாற்றம் பிடிக்க வில்லை."ஒரு பெண்ணுக்காக மாறுவது ஒரு இயலாமை" அது என் அகராதியில் பொறிக்கப்பட்ட கருத்து.ஆனால் அந்த மாற்றங்கள் என்னை மீறி நடந்து கொண்டிருந்தது தான் இயலாமையாக இன்று படுகிறது.அதிர்ந்து பேசும் வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போனது போல் இருந்தது.கர்வமும் திமிரும் சுவடில்லாமல் மறைந்து போனது

அவள் ஏன் என்னை பார்த்து சிரிக்கிறாள் ஏன் என்னை பார்க்கிறாள்,புரிய வில்லை,அவள் அழகு ,நான் பார்த்து பழகிய பெண்களில் எல்லாம் இவள் தான் அழகு அந்த அழகு தானாக என்னிடம் வருவதை எனக்கு வழி நடத்தி செல்ல தெரியாமல் முழித்து கொண்டிருந்தேன் .அந்த நான்கு நாட்கள் என்றும் ஞாபகம் இருக்கிறது அக்டோபர் மாதம் ஏனோ ஞாபகம் முழுவது அங்கேயே தான் இருந்தது.முடியாமல் நான் ஒரு கடிதம் எழுதினேன்
" Hai Vidhya
I dont what u wannt to say ,But still it makes me think so much.
I will expect ur call and I think u are struggling to say
Sorry for disturbing
Love
Krishna

அந்த கடிதத்தை அவளிடம் நானே சேர்ப்பது என்று முடிவு செய்து விட்டு ,அவள் வரும் வரை படிக்கட்டில் காத்து இருந்தேன் ,என்னை பார்த்து கொண்டே
" என்ன இங்க ?"
" இல்ல "என்று ஒரு புத்தகத்தை நீட்டினேன் "அவளும் புரிந்து கொண்டு சந்தோஷமாக சென்று விட்டாள்.படித்தவள் அடுத்த நாள் என்னை பார்த்து பேசுவாள் என்று நினைத்தால் ,அவள் வரவே இல்லை.எனக்கு பயம் தோற்றி கொண்டது.ஏதோ பலவாறு நினைத்து கொண்டு சனிக்கிழமை மதியம் கம்பம் -நெல்லை பஸ் ஏறினேன் ,இரவு வீடு வந்து சேர்ந்தவுடன் அப்பாவிடம் கேட்பதற்கு முன்பாகவே
" கிருஷ்ணா ,வித்யா ,ஜெனிலீண்டா யாரும் போன் பண்ணல !!!" நான் முறைத்து விட்டு சென்று விட்டேன்.அன்று இரவு நண்பர்களுடன் மின்னலே படம் பார்க்க சென்று விட்டேன் .வெண்மதி பாடல் என்னை ஏனோ அவளை ஞாபக படுத்தி கொண்டிருந்தது.அந்த ஒவ்வொரு காட்சியும் என்னை அவள் முகத்தை நினைவு படுத்தியது.எனக்கு சிரமமாக இருந்தது.சத்தியமாக எனக்கு அது காதல் என்று தெரியவில்லை.உண்மையில் அந்த தொய்வு காதல் என்று எனக்கு புரியவில்லை.எனக்கு பெண்ணை அவளை பார்த்து போல் பார்த்து பழக்கம் இல்லாததால் அந்த உணர்ச்சிகள் கனமாக இருந்தது.எண்ணங்கள் முழுவது வித்யா படர்ந்து கொண்டிருந்தது எனக்கு வித்தியசமாக இருந்தது.அவளை பற்றி எந்த ஆசையும் காமமும் இல்லாமல் பார்ப்பது புதியதாக இருந்தாலும் எனக்குள் அவள் எப்பொழுதோ நுழைந்து விட்டாள் என்பது எனக்கு அறியும் திறன் அப்பொழுது இல்லை.சுருக்கமாக நான் வித்யாவை காதலிக்க தொடங்கிவிட்டேன் .அவள் எனக்கு போன் பண்ணியது அல்ல காரணம் ,அந்த போன் பண்ணிய நாளில் இருந்து சனிக்கிழமை வரை நடந்த சம்பவங்கள்.

அடுத்த நாள் சரியாக பாத்து மணிக்கு அழைப்பு வந்தது.என் அதனை துருவங்களையும் மாற்றி போட்ட அழைப்பு.வித்யா என்ற உலகத்தில் நான் சிறைப்பட்ட அழைப்பு.
" ஹ்ம்ம் "
" சொல்லு"
"என்னவோ பேசணும் னு சொன்ன ?
"ஆமாம் ! ஜெனி கால் பன்னுவங்களா ?"
"இல்ல அவ கூட நான் பேசுறது இல்ல "
"ஒ "அவளை அந்த போன் உரையாடல் மிகவும் பதித்து இருந்தது.அது அவளது குரலில் புரிந்தது.
" உனக்கு புடிக்கல இல்ல ?"
கொஞ்சம் மௌனமாக இருந்தாள்.கொஞ்சம் திடமாக
" ஆமா "எனக்கு அவமானமாக இருந்தது ,அப்புறம் என்னடா நம இவ்வளவு கஷ்டப்பட்டு கால் பண்றோம் இவன் கண்டுக்க மாட்டிகிறானே ன்னு தோணுச்சு !!! அதான் நான் போன் பண்ணல .ஆனால் இப்ப கஷ்டமா இருக்கு .பேசாம இருக்க முடியல .கண்டுக்காம போன நான் உன்னைய பார்க்கிறதையும் தொலைத்து விடுவேன்னு இருக்கு !!! ஆனால் பரவா இல்லை " என்று பேசி முடித்தாள்
நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை " நீ என்னை லவ் பண்றியா ?"
"நான் இல்லன்னு சொன்னா நீ என்கூட பேச மாட்ட இல்ல ?"
"அப்படி எல்லாம் இல்ல
" அப்படின்னா நான் உன்னை லவ் பண்ணல"
" அப்ப உனக்கு என்கூட பேச மட்டும் தான் புடிக்குமா "
"ஹ்ம்ம் "

"பொய் சொல்லாத !!!
"நான் சொன்னா நீ நம்ப மாட்டேன்னு தெரியும் ,ஆனா எனக்கு இது லவ் ன்னு தெரியல ஆனா உன்கூட பேசணும் ,நீ என் கூட பேசாம இருக்கிறது கஷ்டமா இருக்கும்"
"ஏன்" என்று தெரியாமல் கேட்டேன் .
"தெரியல கிருஷ்ணா நீ அன்னைக்கி என்கூட நடந்து வந்த போது உன் பிரிஎண்ட்ஸ் (Friends Vishal and Sakthi )எல்லாம் கிண்டல் செஞ்சாங்க இல்ல அன்னைக்கி இருந்தே எனக்கு ஒரு மாதிரி இருக்கு ,அது வரை நல்லா தான் இருந்தேன் ."
கொஞ்சம் பாவமாக இருந்தது.அவளை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று மனம் வருந்தியது.
"சரி நீ என்னைய லவ் பண்றியா ?"அந்த கேள்வியை நான் எதிர் பார்க்க வில்லை "
" ஆம் " என்று ஒரே போடாக போட்டேன் .எனக்கு மறைத்து வைக்க முடியவில்லை ,அந்த குரலில் வழிந்த உண்மை ,ஏன் வாழ்வில் நான் கேட்பேனா மறுபடியும் என்று எனக்கு தோன்றவில்லை
"தேங்க்ஸ் "என்றாள்
"நீ சொல்லவே இல்ல ?"
"என்ன சொல்லணும்"" என்று குழந்தை போல் கேட்டாள்
"That u love me "முடியாது" என்று சிணுங்கினாள்.
"சொல்றியா இல்ல !"
யோசித்து விட்டு சொன்னாள்
அத்துடன் அந்த மாய திரை விலகியது ,
" துன்பம் இனி இல்லை சோர்வில்லை ,சோர்வில்லை தோற்பில்லை நல்லது தீயது யாம் அறியோம் ,யாம் அறியோம் ,அன்பு நெறியில் அறம் வளர்ந்திட நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா "எவ்வளவு அழகாக பாடினான் பாரதி.அவன் காதலிக்க தெரிந்தவன்

4 comments:

Anonymous said...

Fantastic one dude!! It was very nice to read the write-up with Bharathi's note at the end.

Kalakku.

-Hussain

Karthik said...

thanks machi...

Anonymous said...

Great going! :)

Karthik said...

thanks