யாருக்காகவோ எழுதுகிறோம்
யாரோ ஒருவர் படிக்கிறார்
திரும்பி பார்த்தால் ஒரு நீண்ட காலம் தெரிகின்றது
நினைவுகள் எல்லாம் எழுத்துகளாக தெறிக்கின்றது


சில கதாபாத்திரங்கள் எங்கே சென்றன
நம்முடன் தானே இருந்தன ?
மறந்து விடு என்பர் அது நன்றாக இருக்கின்றது
நினைவில் கொள் என்பர் அது மறந்து விடுகின்றது


மேடைகளும் ,அந்த நீரோடைகளும் எங்களுக்கு பழக்கமாகி விட்டது
அரிதாரமும் ,படகுகளும் எங்களுடன் ஒத்து போகின்றது
புதிய வேஷங்களும் புதிய பாதைகளும்
யாரோ ஒருவன் கொண்டது தானே ?


புரியாமல் நாங்கள் எல்லோரும் முழித்து கொண்டிருக்கிறோம்
ஆழமான எண்ணங்களை எல்லாம் தகர்த்து விட்டோம்

எழுதி முடித்து விட்டேன்

நீங்கள் எல்லாம் யார் !!! என்னுடன் இன்று முதல் நீங்களா ?

0 comments: