காலையில் என் ஹீரோ ஹோண்டா வண்டியை ஒட்டிக்கொண்டு செல்லும் போது நான் பார்க்கும் காட்சிகள் அந்த நாளின் என் நிலையை சொல்லிவிடும்.இப்பொழுது என் பாதை அண்ணா நகரில் இருந்து பூந்தமல்லி சாலையை கடந்து ஹரிங்க்டன் பாலம் வழியாக நுங்கம்பாக்கம் வந்து சேருவது.போகும் வழியில் அண்ணா நகர் காபி டே சிக்னல் கொஞ்சம் கூட்டம் அதிகமாக உள்ள நிறுத்தம்.ஐந்து நிமிடங்களை என் கண்களை நோட்டம் விட்ட படி தள்ளி கொண்டிருப்பேன்.வெள்ளி கிழமை நான் அந்த நிறுத்தத்தில் நின்று கொண்டு பச்சை விளக்கு எரிய காத்து இருந்த போது ,எனக்கு எதிர் புறம் இருந்த ரோட்டில் இருந்து ஒரு பள்ளி மாணவன் தன் ஹீரோ சைக்கிளை தள்ளி கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தான்.
அவன் வந்த வேகத்தில் சிக்னல் விழுவதும் சரியாக இருந்தது.அதனால் பதட்டத்தில் வந்தவன் ஒரு பைக் நபரிடம் உரசி கொண்டான்.அவன் சைக்கிள் பின் புறம் இருந்த ஒரு நோட்டு புத்தகம் ,சில புத்தகங்கள் ,தயிர் சாதம் கட்டி இருந்த சாப்பாடு டப்பா ,எல்லாம் அந்த அண்ணா நகர் சிக்னல் நடுவே சிதறி கிடக்கிறது.அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிய வில்லை.இரண்டு போலீஸ் காரர்கள் சிக்னலை அப்படியே நிற்க வைத்து அந்த நோட்டு புத்தகத்தையும் சாப்பாடு டப்பாவையும் எடுத்து கொண்டு நடக்கிறார்கள்.சிறுவன் பயந்து போய் நிற்கிறான் அவன் சைக்கிள் மீது சாய்ந்து கொண்டு.
அந்த சிக்னலில் நின்ற அத்தனை மனிதர்களும் அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்தோம் .ஒரு காவல் அதிகாரி தன் சட்டையில் இருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து பழகடை காரனை வசந்த பவனில் ஒரு தயிர் சாதம் வங்கி வர சொல்லுகிறார்.இன்னொருவர் அவன் புத்தக அட்டையை போட்டு விட்டு அவன் சைக்கிள் பின் புறம் வைத்து விடுகிறார்.சிக்னல் எனக்கு விழும் நேரம் நெருங்குகிறது .அவனிடம் நின்று அந்த தயிர் சாதத்தை வாங்கி செல்லுமாறு சொல்லுகிறார்.எதோ கேட்கிறார் அவன் இல்லை என்கிறான்.அவனிடம் ஒரு பை இல்லையா என்பதாக தான் இருக்கும்.எனக்கு கேட்க வில்லை.அந்த காட்சி எதோ ஒரு நெகிழ்ச்சி நேர்ந்தது போல் இருந்தது.
என் வண்டி ஹரிங்க்டன் பலத்தை தாண்டி சிக்னலில் நின்று கொண்டிருந்தது.பத்து நிமிடமாக சிக்னல் விழாமல் இருந்தவுடன் கொஞ்சம் கடுப்பாகி விட்டது.எனக்கு இருந்த கடுப்பு உடன் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் இருந்தது.ஹாரன் அடித்து பார்த்தும் பயனில்லை.அந்த போலீஸ் காரர் மசிய வில்லை.எரிச்சல் தலைக்கு மேல் இருந்தது. இகா திரை அரங்கில் இருந்து வரும் வண்டிகள் மட்டும் வந்த வண்ணம் இருந்தது .பத்து நிமிடம் பதினைந்து ஆனது.வண்டிகள் சிக்னலை மதிக்காமல் முன்னேற ஆரம்பித்தது.அந்த காவல் அதிகாரி " எய் எய் " என்று கத்தி கொண்டு வந்து எல்லோரையும் தடுத்தான்.
சில வினாடிகளில் ஒரு வெள்ளை அம்பாசிடர் கார் சிகப்பு சைரனை போட்டு கொண்டு அந்த ரோட்டில் சென்றது.எல்லா காவல் காரர்களும் சல்யுட் வைத்தார்கள் .எங்கள் சிக்னல் திறக்க பட்டது.எனக்கு ஆர்வம் தங்காமல் அது யார் என்று பார்க்க வேண்டும் என்று இருந்தது.வண்டியை கொஞ்சம் வேகமாக செலுத்தி போய் அந்த காரின் அருகில் சென்று பார்த்தேன்.கமிஷனர் .என்ன சொல்வது .ஒரு அதிகாரி செல்ல ஒரு ஊரின் அத்தனை வண்டிகளும் நிற்க வேண்டும்.
ஒரே நாள் இரண்டு முரண்பாடான நிகழ்வுகள்.இரண்டிலும் போலீஸ் அதிகாரிகள் தான் கதா நாயகர்கள் .ஒன்றில் ஒரு சிறுவன் செல்ல ஒரு சிக்னலை நிற்க வைத்தார்கள் போலீஸ் அதிகாரிகள்.அந்த நிகழ்வு முடியும் வரை யாரும் செல்லுவதற்கு அவசரம் காட்டவில்லை.அடுத்தது ஒரு அதிகாரி செல்ல எல்லா சிக்னலையும் ஸ்தம்பிக்க வைத்து இருந்தார்கள்.
என்ன செய்வது ,எல்லாவற்றையும் ரசிக்க கற்று கொள்ள வேண்டியது தான்.

4 comments:
Police athigarikalukkum manitham irukirathu....athigara varkathin thavaru...paavam avargal enna seivargal...avargalum sagithu kolgirargal..pothu janathai vida..
Good one Karthik. Cinema is just an exaggeration of real life and this incident in your life does prove it
@ Aslam.
Nee solvathu Unmai,manithargal than ....
@ Sabari
welcome back after ur marriage holidays,Hope everything is fine and enjoying ....thanks for dropping in the tamil blog
Post a Comment