எனக்கு வயதாகி விட்டது என்று நான் எடுத்து கொள்ள வேண்டுமா? இல்லை என் நினைவுகள் எல்லாம் பழமையாகி விட்டது என்று நினைக்க வேண்டுமா? இன்று என்னை ஒரு centre of attraction ஆக எவனும் நினைப்பது இல்லை.அது ஒரு காலம் என்று நான் கதை ஆரம்பிக்கலாம் .ஆனால் உண்மை என்னவோ வேறு என்று என் மனம் சொல்லுகிறது.
இந்த புதிய வேலையில் எனக்கு ஒரு நிம்மதி சனிக்கிழமையும் எனக்கு ஒய்வு என்பது.ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிறும் நான் தவறாமல் ஒரு காரியத்தை செய்ய வேண்டி இருக்கிறது.என்னவென்று சரியாக சொல்ல நினைபவர்கள் மறுபடியும் முதல் நான்கு வரிகளை படிக்கவும்.இப்பொழுதெல்லாம் நான் திருமணங்கள் சென்று வருவது எனக்கு ஒரு தவற முடியாத பணியாகி விட்டது.
வாரம் தவறாமல் கல்யாணங்கள்.சில வாரங்கள் நான்கு கல்யாணம் வந்து என்னை சிக்கலில் எல்லாம் மாட்டி விட்டிருக்கின்றன,அப்படி நான் தவறிய கல்யாணங்களும் உண்டு.திருமணம் செய்து கொள்பவன் எல்லாம் என்னுடன் படித்தவன் ,என்னுடன் பீடி குடித்தவன்,என்னுடன் சண்டையிட்டவன் ,என்னுடன் சினிமா டிக்கெட் வாங்க வரிசையில் நின்றவன்.மொத்தத்தில் என் வயதில் உள்ளவன்.அல்லது என்னை விட இளையவன்.சிலர் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதால் அந்த பெண்ணும் எனக்கு தெரிந்தவளாக இருக்கிறாள்.
கல்யாணம் என்னும் ஒரு நிகழ்ச்சி ஒரு அழகான ஒரு நிகழ்வு.நானும் ஒவ்வொரு கல்யாணம் செல்லும் போதும் என் பல பழைய நண்பர்களை சந்திக்கிறேன்.பல விஷயங்களை பற்றி பேசுகிறோம்.என் காது அருகில் பலர் வந்து
" மச்சி எனக்கு engagement ஆயிடுச்சு டிசம்பர் ல கல்யாணம் !!!" என்று கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது.
பல தொலைந்து போன நண்பர்கள் எனக்கு என் செல்போனில் அழைத்து ' "
"மச்சி நான் ராஜு பேசுறன் டா எப்படி இருக்க !!!'
"எந்த ரமணி ???"
"டேய் உன் கிளாஸ் மேட் டா'
"மச்சி மச்சி சொல்லு எப்படி இருக்க " என்று நான் கண்டுபிடித்து தெளிவதற்குள் ஒரு கருத்து அவனிடம் இருந்து வரும்
" உன் நம்பர கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் டா "
இவன் ஏன் நம்ம நம்பர கண்டுபிடிக்க கஷ்டப்பட்டான் என்று யோசித்தால் ஒரு விஷயம் சொல்லுவான்
'மச்சி எனக்கு கல்யாணம் டா Groups க்கு மெயில் அனுப்பி இருக்கேன் "
என்னால் அவனை ஒரு மாப்பிள்ளையாக நினைத்து பார்க்க முடியவில்லை என்று சொல்ல மாட்டேன் ,ஆனால் அவனை நான் ஒரு மாப்பிளையாக நினைத்தது இல்லை.
உண்மையில் நான் என்ன சொல்ல வருகிறேன்.எனக்கு கல்யாண வயது ஆகி விட்டதா?அல்ல என் நண்பர்கள் சீக்கிரமாக கல்யாணம் செய்து கொள்கிறார்களா ? எது உண்மைஎனக்கு வயதாகி கொண்டு போகிறது அது உண்மை தான்.ஆனால் என்னால் ஒரு குடும்பத்தை நடத்தும் அளவிற்கு ஒரு அவசரம் நேர்ந்து விட வில்லை.பக்குவம் என்ற வார்த்தை அந்த இடத்தில் என்னை இயலாமை ஆக்கி விடும்.எனக்கு பெண் தேடும் படலம் நடந்து கொண்டிருந்தாலும் ,என் condition களுக்கு பெண் அமைவது ரொம்ப கஷ்டம்.ஏன் என்றால் எனக்கு எப்படி பெண் வேண்டும் என்று எனக்கே என்று வரை தெரியாது,என் பெற்றோர்களுக்கு தெரிந்த வரை எனக்கு சில நிபந்தனைகள் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நிபந்தனை இருந்தால் தானே பெண்ணை தேர்ந்து எடுக்க வேண்டும்.
மொத்தத்தில் நான் என் நிலையை நன்று ரசிக்கிறேன்.பல விஷயங்களை மறந்தும் மன்னித்தும் கொண்டிருக்கிறேன்.சந்தோஷமாக சிரிக்கிறேன்.Style க்காக தாடி வளர்கிறேன்.நிறைய புகைகிறேன்.நிறைய படிக்கிறேன்.நிறைய ரசிக்கிறேன்.நிறைய இருக்கிறேன்.எனக்கு ஏன் இப்பொழுது கல்யாணம்.இதுவே நன்றாக இருக்கிறது.

4 comments:
நண்பரே,
திருமணம் என்பது ஒரு பயணம், அது மாற்றம் அல்ல, திருமணம் உங்களின் தற்போதைய நிலையின் குறைபாடுகளை சரி செய்யும் சாதனம் அல்ல. பிரச்னை/தேவை இருப்பவருக்குத்தான் திருமணம் தேவை என்பது இல்லை. அது 3 அல்லது 4 ஆண்டுகள் படித்ததும் தரப்படும் பட்டம் இல்லை. நிபந்தனைகள் வைத்துக்கொண்டு துணை தேடுவது தாஜ்மகாலை புகைப்படத்தில் பார்ப்பது போல, உண்மையான பரிபூரணம் அந்த அனுபவத்துள் நேராக நுழைந்தால் மட்டுமே கிடைக்கும். வாழ்க்கைக்கு பிறர் எழுதும் அகராதி உதவாது (உங்கள் அனுபவம்/அர்த்தம் வேறு), பயண வழிகாட்டி உதவும்.
வாழ்த்துக்கள்.
@Bala
Great Man is here at my Blog..And i know u will comment for this post...I have given a thought abt it and i have been thinking abt it...I am not against marriage...but i feel its not the time for me now...i am happy and let me enjoy my state of being,,I know how u feel : " podi pasanga"
cant help it though:P its great being like this
வா டா மாமு.. இப்படி பேசுறததுக்கு எத்தன நாள் காத்து இருந்த??..
என்னவோ கல்யாணம் பண்ணிய எல்லாரும், சந்நியாசி ஆகிவிட்ட மாதிரி பேசுற..
மச்சி எதுக்கு நான் ஒண்ணும் சொல்ல விரும்பல.. But u will get to know it soon.. Get married.. u are really getting OLD :)
@vinoth
Evvalavu naal achu un comment ah parthu...eppadii erukku man life?
Enakku vayasatcha...en mugatha partha enakku theriala...:) ana en nadavadikaiya partha theriyuthu..I am getting aged by activities..I am composed nowadays which I see in my behaviour.But athukku kalyanam pannikanuma...I dont see marriage as a happiness its more of a compulsion atleast for me :)
Post a Comment