புத்தகங்களும் பயணங்களும் தரும் இன்பம் உலகில் எதுவும் தராது என்று யாரோ சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்.புத்தகம் வாசிப்பதில் நான் பெரிய வித்தகன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன் .ஆனால் தமிழில் உள்ள பல படைப்புக்களை நான் கொஞ்சம் ருசி கண்டிருக்கிறேன்.சில ஆங்கில புத்தகங்களையும் ரசித்து இருக்கிறேன்.இப்பொழுது விவாதம் அதுவல்ல.என் பயணங்களை பற்றி தான்.அந்த மேற்கூறிய கூற்று உண்மை என்பதை விட நான் அதை மிகவும் மதிக்கிறேன்.

என் தனிமையான பல இரவுகளை கழித்தது பயணங்களில் தான்.பயணங்கள் என்பது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்வது மட்டும் அல்ல.பயணங்களை பற்றி எழுதிய பல புத்தகங்கள் பல நாடுகளை பற்றியும் அவர் அவர் எழுதிய அனுபவங்களை பற்றியும் எழுதியிருப்பார் .1000 Places to See Before You Die எழுதிய Patricia Schultz என்ற புத்தகம் உலகம் முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை பற்றி எழுத பட்டது.சில புரட்சி எழுத்துக்களும் பயணங்களை மையப்படுத்தி எழுத பட்டிருக்கின்றன .பொலிவியன் இரவுகள் என்ற புத்தகம் சேகுவராவின் பயணத்தை பற்றியும் அவரது கொரில்லா போர் முறைகளை பற்றியும் அவரது கடைசி இரவுகளை பற்றியும் எடுத்து உரைக்கும் ஒரு புத்தகம்.நான் சொல்ல வருவது என்னவென்றால் பயணங்கள் தரும் களைப்பை விட களிப்பு தான் அதிகம்.பயணங்கள் நம் காலத்தை மறக்க செய்ய வைக்கும் சக்தி வாய்ந்தது.
எனக்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்று நினைத்த பொது வலித்தது.ஆனால் அன்று நான் பணியில் புதிதாக சேர்ந்து இருந்ததால் எனக்கு வேறு வழியும் இருக்க வில்லை.ஆனால் அன்றைய பொழுதில் நான் சென்னையில் சந்தோஷமாக இருக்க வில்லை.பல வலிகளும் பல ஏமாற்றங்களையும் சுமந்து கொண்டு தான் திரிந்து கொண்டிருந்தேன்.சில நேரம் எனக்கே அன்று என்னை பார்க்கும் போது பிடிக்க வில்லை.சில சமயம் எரிச்சலாக இருக்கும்.தனிமை கொன்றுகொண்டு இருந்த நேரங்கள் அவை.பெங்களூர் எனக்கு புதிய வாழ்வை தந்தது.புதிய நண்பர்கள் நேர்ந்தர்கள்.புதிய பழக்கங்கள் சேர்ந்தன.அனைத்தும் என் தனிமையை விரட்ட ஒன்று சேர்ந்து உழைத்ததை இன்று நினைத்தால் நன்றாக இருக்கிறது.

பல சமயங்கள் நான் மும்பை செல்ல நேரிட்டது.சில மாதங்கள் வாரம் இருமுறை எல்லாம் நான் மும்பை சென்று வந்து இருக்கிறேன்.மும்பையின் அவசரம் ஒரு ஆச்சிரியமான அதிசியம்.அந்த அவசரத்தை நான் செயலில் கொண்டு வர முடியாது.தவறுகள் தான் நிகழும்.மும்பையில் நீங்கள் அவசரமாய் இருந்தால் தான் தவுறுகள் நிகழாது.

கோவை என்ற ஊர் நான் பிறந்த ஊர் என்பதை விட என் தம்பி படித்த ஊர் என்பதே எனக்கு அதிகம் நினைவில் இருக்கிறது.கோவையில் என் பழைய நண்பர்களுடன் அடித்த லூட்டிகளை நினைத்து பார்க்க இனிக்கிறது.

பயணங்கள் எப்பொழுதும் ஒரே பாலருடன் இருந்தால் இனிக்காது.கண்டிப்பாக எதிர்ப்பால் வேண்டும்.பெண் இல்லாமல் எனது பயணங்களா ?கண்டிப்பாக உண்டு.மதுரை ,திருநெல்வேலி ,மும்பை,சென்னை,பெங்களூர்,சுரத் கொச்சின்,விஜயவாடா என்று பல ஊர்கள் .பல ஊர்களில் இருந்து நான் .எத்தனை முகங்கள் எத்தனை நிகழ்வுகள் எத்தனை அனுபவங்கள்.பயணங்கள் பழயதாய் போனாலும் அனுபவங்கள் புதிது தான்.நான் அவள் அது .....எங்கே ??? போல் இதிலும் சில கற்பனைகள் பல உண்மைகள்.கதையாக அல்லாமல் ஒரு Narrative style ல் கொண்டு செல்ல முனைகிறேன்.உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

இனி ஒரு தோணியில் நானும் பலரும்

4 comments:

Vinoth Pradeep said...

Hmmm.. One more ride with karthick.. Good dude.. keep moving.. all the best. :)

Anonymous said...

Karthik,

Narrative style articles will be very much interesting to read. Awaiting for the episodes.

Mean time, havent seen any more posts on 'Mandirakol??

-- Hussain

Karthik said...

@ Vinoth

thanks man..definitely will be a good ride

Karthik said...

@ hussain

Manthirakkol kandippaga undu machi...that was one of the plot in my mind for a long time..Just needed a break as i need to get geared with improvement in my work..thats it...