சுதந்திர தின வாழ்த்துக்கள்.என்ன சொல்வது இந்த முறையும் நான் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு தான் இருந்தேன்.என்னால் பெரிய அளவில் இந்த மூன்று நாட்களை செலவிட முடியவில்லை.காலையிலே அம்மா போன் செய்து கொஞ்சம் தங்கம் வாங்கி வைக்குமாறு சொன்னார்கள்.தங்கமா ? என்னமா ரொம்ப சாதரணமா சொல்றீங்க.தங்கம் விலை குறைந்து விட்டது என்று சொன்னார்கள்.என் வீட்டின் சரியாக எதிரில் ஜி .ஆர்.டி .தங்க மாளிகை ஆரம்பித்து இருந்ததால் எனக்கு ஒன்னும் பெரிய அளவில் அலைச்சல் இல்லை.நான் கிரெடிட் கார்டு வாங்கி கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சென்றேன்,அவர்கள் இந்த Volatile market போது வாங்கி கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்கள்.நானும் ஏ.டி.ம் சென்று பணம் எடுத்து கொண்டு திரும்ப சென்றேன்.அதற்குள் தங்க காசுகள் தீர்ந்து விட்டது.என்ன கொடுமையடா இது.
மதியம் கொஞ்சம் உருப்படியாக என் புத்தகங்களை எல்லாம் ஒழுங்காக எடுத்து வைத்தேன்.நல்ல புத்தகங்கள் கொஞ்சம் என்னிடம் இருக்கிறது.ஜெயகாந்தன் புத்தகம் எல்லாம் இருக்கிறது.ஆனால் என்னவோ இப்பொழுது படிக்க முடிவதில்லை.மறுபடியும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
ஊர் முழுக்க ஆடி தள்ளுபடி நடக்கிறது .ஏற்கனவே ஒரு ஐந்து ஆயிரம் ரூபாய் இந்த மாதம் தள்ளுபடியில் வாங்கி விட்டேன்.எனக்கு எப்பொழுதும் இந்த தள்ளுபடி செல்லுபடி ஆகாது.ஆனால் இந்த முறை கொஞ்சம் தேடி எடுத்து விட்டேன்.எல்லாம் முடிந்த பிறகு இந்த ஷாப்பர்ஸ் ஸ்டாப் வேறு இப்பொழுது தான் தள்ளுபடி ஆரம்பித்து இருக்கிறார்கள்.போக வேண்டும் என்று சொல்லுகிறது.ப்ரொவோக் ஷர்ட் அங்கு தான் உருப்படியாக கிடைக்கும்.மதியம் ஒரு மிதமான உணவு சாப்பிட்டு விட்டு,கொஞ்ச நேரம் நெட்டில் உட்கார்ந்து விட்டேன்.
நேற்று சுதந்திர தினம் என்பதால் ஜிம்மும் லீவு விட்டு விட்டார்கள்.என்ன செய்வது என்று தெரியாமல் புதிதாக வந்திருக்கும் ஒரு ஹிந்தி படத்திற்கு சென்றேன்.நல்ல படம் தான்,கொஞ்சம் ஆங்கில வாடை அடித்தது.புது ஹீரோ ரன்பீர் கபூர் அதிர்ஷ்டசாலி .மூன்று கதாநாயகிகளுடனும் உதட்டில் ஒரு முத்தம்.யப்பா.படம் முடிந்தது .என்ன செய்வது .தெரியவில்லை.சுதந்திர தினம் அன்று பார் திறந்து இருக்குமா என்ன ?முயற்சிப்போம் என்று பார்த்தால் ,திறந்து தான் இருக்கிறது.
ஒரு விஸ்கி யை வாங்கி கொண்டு உட்கார்ந்தேன்.யாரும் வீட்டில் இல்லை.எல்லாம் மூன்று நாள் லீவுக்கு சென்று விட்டார்கள்.ஒரு குவாட்டர் அரை மணி நேரத்தில் காலியாகி விட்டது.
மணி பதினொன்று .என்ன செய்வது .தெரியவில்லை.சில பாடல்களை கேட்போம் என்று ஆரம்பித்தேன்.கொஞ்ச நேரத்தில் என் நண்பி அழைத்தாள்,என்ன வேண்டும் அவளுக்கு தெரியவில்லை .எனக்கு தூக்கம் வருகிறது.ஆனாலும் அவள் பேசி கொண்டே போகிறாள்.நான் போனை வைத்து விட்டேன்.
தனியாக இருப்பது ஒன்னும் கஷ்டம் இல்லை .நல்லாத்தான் இருக்கிறது.

3 comments:
dai mamu.. enna da daily dairy mathiri ezhuthura????
I didn't like that post.. sorry mamu
ok...u didnt like it.i need to tell u the truth..i got this template done and i was motivated to write some thing on tis new template and i wrote this...it was happened to be a independence day..and i didnt mean any sort of intentions to write my day to day activity..:)
hey machi.. i was in a bad mood when i read this post.. but somehow that time i commented with the same mood.. But onething for sure if i would have read that after an hour or so.. i would have not commented so rude... But still :P
Post a Comment