என் பெயரை அவர் உண்மையிலேயே உச்சரித்து விட்டார்.இனி நான் பேச வேண்டும்.அனைத்தும் நடக்கிறது.எதுவும் கற்பனை இல்லை.இது கற்பனை இது உண்மை என்று கூட சொல்ல தெரியாத வயது.இதோ நான் கிளம்பிவிட்டேன்.

அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்தது மட்டும் தான் நினைவிருக்கிறது.இடையில் குயிலை பாடினான் காகத்தை பாடினான் என்பதில் ஒரு ராகம் .பிறகு கொஞ்சம் தொய்வு பட்ட மாதிரி தெரிந்த போது என் குரலில் ஒரு கோபம் தெரிந்தது.யார் மேல் என்று தெரியவில்லை.அன்றைய பொழுதில் என் மனதிற்கு ரேச்சல் மிஸ்ஸாக இருக்க வேண்டும்.நான் பாரதியின் வறுமை வரிகளை பற்றி பேசி கொண்டிருக்கிறேன்.என்னை விட வயது மூத்த வகுப்பினர் எல்லாம் அந்த வரிசையில் இருந்து ,இது யாரடா என்று எட்டி பார்கிறார்கள்.யாசின் அண்ணன் என்னை ஒரு விநாடி பார்க்கிறார்.என் தம்பி என்னை பார்க்கிறான்.நான் இவர்களை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறேன்.என் குரல் மட்டும் ஒலித்து கொண்டிருக்கிறது.நான் பேசி கொண்டிருக்கும் பொழுது பள்ளிக்கு தாமதமாக வந்த சிலர் என் குரலை பள்ளி வாசலில் இருந்த படி அமைதியாக கேட்டு கொண்டிருக்கிறார்கள்.இதோ கடைசி வரிகள் நான் பேச போகிறேன். "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே ,எங்கள் தந்தையார் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே " என்று முடிக்கிறேன்.

நன்றி என்று கூறி இரண்டு வினாடிகள் ஆகி விட்டன.ஒரு சப்தம் இல்லை.நான் ஒரு பெரிய சொற்பொழிவு ஆற்றியது போல் உணர்ந்து இருக்கிறேன்.என் தொண்டை வறண்டு இருக்கிறது.இதோ ஆரம்பித்து விட்டது.கைதட்டல்.கைதட்டல்.ஆஹா நன்றாக இருக்கிறது.ஆனால் யார் பேசினாலும் கை தட்டுவார்களே ,இது ஒரு சாதரண கைதட்டாக இருக்குமோ ? ஓய்கிறது கைதட்டல்கள்.எல்லோரும் கலைகிறார்கள்.

யாசின் அண்ணன் என்னிடம் வந்து " தம்பி கலக்கிட்ட டே " என்று சொல்லிவிட்டு சென்றார்.நான் என் வகுப்பின் வரிசையில் சங்கமிக்கிறேன்.என் நண்பன் நரேஷ் பாபு பின்னாடி நான் நிற்க வேண்டும்.நாராயணன் கை கொடுத்தான்.எனக்கு சந்தோசம் வந்து கொண்டிருந்தது.நரேஷ் பாபு அருகில் சென்று கேட்டேன்.

" எப்படி டா ?"

" உன்னைய இனிமேல் கைலையே பிடிக்க முடியாது போ "

ஹ்ம்ம் உண்மை தான் அந்த பேச்சு என் பல தகுதிகளை முழுமை படுத்தியது.என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.என் பெயரை ஒரு அடையாளம் ஆக்கியது.

மதிய வேளையில் நான் சாப்பிட்டு கொண்டிருந்தேன். கங்காதர் என்ற ஒரு சிறுவனின் தந்தை அவனுக்கு சாப்பாடு கொண்டுவருவது வழக்கம்.பத்தாம் வகுப்பின் வாசலில் நாங்கள் அமர்ந்து சாப்பிடுவோம் .அவர் கங்காதருக்கு சாப்பாடு கொண்டு வருவதுடன் எங்களுக்கு கிரிக்கெட் ஸ்கோரும் கொண்டு வருவார்.எங்கள் அருகில் தான் அந்த சிறுவனும் சாப்பிடுவான்.அன்றும் நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவர் என் அருகில் வந்து
" தம்பி நீ பேசினது சூப்பர் .உனக்கு தெரியுமோ தெரியல But you are marvellous son "என்றார்,

எனக்கு அப்பொழுது தான் நம்பிக்கை வந்தது.பல பாராட்டு மழைகள்.என் திமிர் வடிவமைக்க பட்டு கொண்டிருந்தது.அப்பொழுது எனக்கு பாரதி என் உள்ளே நுழைந்த கனங்களை நான் நினைத்து பார்த்தேன்.என் தந்தை என்னை பல போட்டிகளுக்கு அனுப்பி வைத்தார்.நான் ஒரு வழக்கமாகவே போட்டிகளில் கலந்து வந்து பரிசுகள் வென்றேன்.எல்லா பேச்சுக்களிலும் பாரதி இருந்தான்.

பாரதியை பற்றி பாட புத்தகங்களில் வந்தால் நான் ஒரு ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.ஒரு முறை என் தந்தையின் பாரதியார் கவிதைகளை புரட்டினேன்.என் கண்களில் பட்ட கவிதை.

"காலா ! உனைநான் சிறு புல்லென மதிக்கிறேன் ; என் காலருகில் வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்."

மிரண்டு விட்டேன்.என் தாத்தா சொல்லி காலனை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.இவர் என்னடா இப்படி தன் மரணத்தை கூட துச்சமாக நினைக்கிறார்.கொஞ்சம் என் வயதிற்கு மீறி அவர் வாழ்க்கை வரலாறுகளை படிக்க ஆரம்பித்தேன்.ஐந்தாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் பாளையங்கோட்டை நூலகத்தில் மெம்பர் கார்டு வாங்கி வைத்து இருந்தது நினைவில் இருந்தது.சென்று புரட்டினேன்.புரியா விட்டாலும் சில கவிதைகளை மனப்பாடம் செய்து கொண்டு வந்தேன்.
நான் நூலகம் சென்று படித்து அடுத்தவரிடம் மார் தட்டி கொள்ள!! தமிழ் வகுப்புகளிலும் கட்டுரை போட்டிகளிலும் வெற்றி பெற !!! சுயநலம் இருந்தது.இந்த மாற்றங்கள் ஒன்றும் ஒரு வருடத்தில் நடந்தது அல்ல.அது படி படியாக நடந்தது.பல தருணங்கள்.பல வெற்றிகள் பல ஆனந்தங்கள் பல உண்மைகள் எனக்கு பாரதியை உணர செய்தது.முழுவதும் நான் பாரதியை ரசிக்க ஆரம்பித்த போது எனக்கு பதினெட்டு வயது ஆகி இருந்தது.

ஒரு நாள் தூர்தர்ஷனில் வறுமையின் நிறம் சிகப்பு படம் ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்தது.அந்த கமலின் கதாபாத்திரம் பாரதியின் கொள்கையுடன் வாழ்பவனாக கடைசி வரை வாழ்ந்த ஒரு கதை எனக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கி கொண்டிருந்தது.அதில் ஒரு காட்சி ,பாரதியின் புத்தகங்களை கமல் பசியால் எடைக்கு விற்கும் போது அந்த எடைக்கரன் பாரதியின் புத்தகங்களை வாங்க மறுத்து விடுவான்.அப்பொழுது ஸ்ரீதேவி உள்ளே நுழைந்து கமலின் பரிதாபமான நிலையை பார்த்து நிற்கும் போது கமல் சொல்லும் வார்த்தைகள்

" பாரதி கடவுள் தான் அதை விட பெரிய கடவுள் பசி Omni present and omni potent"

பசியை நான் உணர்ந்தது இல்லை ஆனால் அந்த ஒரு நிமிடம் பாரதியை உணர்ந்தேன்.அந்த ஒரு நிமிடம் பாரதி கடவுளா என்று நினைத்து பார்த்தேன்.உண்மையில் அது தான் அவர் எண்ணங்களுக்கு மக்களும், அவர் வார்த்தைக்கு இருக்கும் வீரியத்தின் படர்தலையும் உணர்ந்தேன்,அந்த படத்தில் வரும் திமிர் ஒரு அபத்தம் இல்லை.அது ஒரு நேர் கொண்ட நடத்தை.எனக்குள்ளும் ஒரு திமிர் இருந்தது.அந்த திமிர் கர்வமாகியும் தீயன வாகியும் போகாமல் நான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

அன்றிலிருந்து பாரதி என் virtual companion ஆகிவிட்டான் .அந்த சக்திக்குள் இருந்த பல வழிகளை நான் பார்த்து வந்தேன்.அவனை போல் வாழ வேண்டும் என்று ஒரு சில நாட்கள் நினைப்பேன்.என் வாழ்வு முறைக்கு சரி பட்டு வராது என்று நான் விட்டு இருக்கிறேன்.நான் தோற்ற போதெல்லாம் நான் பாரதியை நாடி இருக்கிறேன்.ஜெயித்த போதெல்லாம் பாரதியை போற்றி இருக்கிறேன்.என்னை நானே ஹரி பாரதி என்று அழைத்து கொண்டேன்.எனக்கு ஹரிபாரதி தாசன் எல்லாம் இருந்தார்கள்.ஒரு நண்பன் என் Autograph இல் அவ்வாறு எழுதினான்.

என் நிலைகளை நானே வடிவமைத்து கொண்ட போதெல்லாம் சில நேரம் எனக்கும் பாரதிக்கும் இருக்கும் அருகாமையில் அழுதிருக்கிறேன்.பாரதியின் காணல் நிழல் தெரியும் என் நினைவுகளின் போது நான் தவறுகள் செய்தது கிடையாது.இன்றும் நான் படுக்கும் மெத்தையில் பாரதியின் புத்தகங்களை வைப்பது கிடையாது. நம்ப மறுத்தால் Truman show படத்தில் வருவது போல் ஒரு கேமரா வைத்து பார்த்து கொள்ளலாம்.

பாரதியை நான் என் புரிதலாக பார்க்கிறேன்.என் நிஜங்களின் ஆதரமாக கொண்டிருக்கிறேன்.அந்த கவிதைகளை மனப்பாடம் செய்யும் காலத்தை நான் தாண்டி வந்து விட்டேன்.அந்த கவிதைகளை என் மருந்துகளாக கொண்டிருக்கிறேன்.நான் துவண்டு போன சமயத்தில் சில நேரம் ஏதும் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்கும் பொழுது கண்ணில் தெரியும் என் வழி பாரதியார் கவிதைகள்.அந்த வழி பல முறை என்னை கரை சேர்த்து இருக்கிறது.முழக்காமல் தடுத்து இருக்கிறது.

என் தந்தைக்கு நான் எவ்வளவு மதிக்கிறேனோ அவ்வளவு மதிக்கிறேன் பாரதியை.முடித்து விட்டேன்.இதனாலே அவன் இந்த பதிவுகளில் அதிகம் தென்படுகிறான்.என் உற்றவன் போல் தோற்றம் அளிக்கிறான்.அது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே.இப்பொழுது சொல்லுங்கள் பாரதி யாராகி போனான் !!!!!!!????

நானென்னும் பொய்யை நடுத்துவோன் நான்
ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
ஆறிவாய் விளங்கும் முதற் சோதி நான்.

வறுமையின் நிறம் சிகப்பில் என்னை பாரதிக்கு அருகில் கொண்டு சென்ற காட்சி

16 comments:

Anonymous said...

பாரதி யாராகி போனான்???

Bharathi..as Kamal said...Omni Present...

Tamilanodu vaalgiraan..

Bharathi...Tamilagi ponan...

Achathai thavirka sonavan...nimirntha nadaiodu vaalnthavan...palarai maatri irukiran....ungalukul satru athigamagave maatri vitan...

Anonymous said...

Very nice post dude on Bharathi. Unnoda voice base than yenakku nalla theriyumae, mike ae illama paesi, college symposiums win pannavanaechae, nee. Wondering to know, that u got ur talkin skills, on class VI itself.

In this bharathi episodes, "Bharathy unakulla aakiramithatha vitham" narration was nice to read. May be bharathi has a super power, coz, even though he entered in ur hrt as a hate factor, now i guess from ur posts that, bharathi is dominating in each of ur actions.

--Hussain

Anonymous said...

Ohh Yeah,, missed to wish you on ur 100th post. Congratulations machi and its a remarkable acheivement. Looking forward to see more and more posts from u.

Intha template supera irukuda, oru mathri feel a kudukudhu.

Anonymous said...

Hi,

பாரதி யாராகி போனான்???....it was really super and very much impressive.
Your impression over Bharathiyar and the flow of writing is well expressed.
Expect more post with the same effect....

Regards,
JayaPalani.

Sriram said...

நண்பா கார்த்திக்,
உன்னுன் விழித்து கொண்டது உன்னுடைய ஆளுமை தான். ஆது பாரதி என்னும் வாஹனம் வழியாக பயணித்திருக்கிறது. இந்த அண்டத்தின் ஒவ்வொரு உயிரோடத்துள்ளும் ஏதோ ஒரு உந்துதல் கலையை வடிக்க பணித்துத்தான் கொண்டிருக்கின்றன. அதன் நிதர்சனம் தான் உன் கணையாழி பாரதி.

Anonymous said...

fantastic write da....i would say this can go down as one of your best work till now....
S K

Vinoth Pradeep said...

Good One da. i loved it.

Mamu but still u could have written more, u could have presented the touch of bharathi in all aspects of ur life.. u could have shared lot of emotions with bharathi.. you should have touched those.. think its more than 10 years that bharathi has occupied you fully.. but still this experience deserves more posts... Hard stop on this post was not that easy to digest

This time your co-relation was awesome, but still the spectrum could have been much broader :)

Machi you have enough potenial to impress people with your words, make use of it :P

Good post Keep it up

Karthik said...

@ Aslam
//....ungalukul satru athigamagave maatri vitan...//

ketka perumaiya erukku da...

Karthik said...

@Hussain

We had a nice time in the paperpresentation..with out mike we swept the prize preparing for one night though i had no idea abt the technicalities of the paper...

Thanks for coming back...HE IS NOT DOMINATING ...HE IS ALONG

Karthik said...

@hussain

thanks for ur wishes da...Feel ah kodukkuthaa....deiiiii...

I would certainly keep this momentum going

Karthik said...

////நண்பா கார்த்திக்,
உன்னுன் விழித்து கொண்டது உன்னுடைய ஆளுமை தான். ஆது பாரதி என்னும் வாஹனம் வழியாக பயணித்திருக்கிறது. இந்த அண்டத்தின் ஒவ்வொரு உயிரோடத்துள்ளும் ஏதோ ஒரு உந்துதல் கலையை வடிக்க பணித்துத்தான் கொண்டிருக்கின்றன. அதன் நிதர்சனம் தான் உன் கணையாழி பாரதி.////


ஸ்ரீராம்
மிக்க நன்றி உன் கருத்திற்கு.உண்மையில் என் ஆளுமையை தூண்டி விட எத்தனையோ சந்தர்பங்கள் இருந்து இருந்தாலும் அது பாரதியாக இருந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது..உண்மையில் உன் கருத்து எவ்வளவு பெரிய கருத்து என்பதை நான் உணர்கிறேன்.

தமிழில் எழுதி பார்ப்பது அருமையாக இருக்கிறது அல்லவா..நீயும் எழுதேன்.

Karthik said...

@SK..

thanks man...i too regard the same as you..

Karthik said...

@ Vinoth..

athil mutrum nnu naan poda villaye...athanal athu thodarum..it means it will be continued time and then probably after some days..but for all this experiences of my lifeand bharathy will go on till ths blog goes on.

Karthik said...

@Jaya Palani

Hey thanks mate...neengal varugai thanthathu magilchi alikkirathu..keep visiting and i will try to keep up the same work ..

Anonymous said...

and one more thing...some one asked barathi what it takes to write the best poetry.... i dont remember exactly but something to this effect...
Barathy said ...oru manithan ezhuthuvathil illai oru kaviyin aatral ....avan vazhnthu vadivamaikiraney athuvey unmayana kavithai...
I feel the same and thats why
i dont like people who write dark poetries...barathy just didnt write but lived a life which in itself a poetry...
super la
S K

Sriram said...

I went through the comments again and recollecting the days when we were in college. Everyone would bring thier own poems and read it in tamil class. So actualy the professor would want everyone to read thier work as he keeps saying ""ஒரு கவியெழுத்து கவிதையாவது எழுதப்படும் பொழுதல்ல வாசித்தப்படும் பொழுதே. அந்த வகையில் உன்னுடைய படைப்புக்கள் பலமுறை கவிக்கபபடுகின்றன". hope you agree. By the way, wats the procedure to post blogs. am curious. reading your blogs have really driven me to post some of my thoughts..