எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம் .எத்தனை விதமான உறவுகளில் திளைக்கிறோம்.ஆனாலும் ஒரு தேடல் இந்த உறவுகளுக்காக இருந்து கொண்டே இருப்பது ஏன் என்று அடிக்கடி யோசித்து பார்ப்பேன்.அதையும் தேடி கொண்டு தான் இருக்கிறேன்.
"ஆமா யா என் பொண்டாட்டி ஓடி போய்ட்டா " என்று ஜனகராஜ் சொல்லுவது மாதிரி பல கதைகளை நான் பார்க்கிறேன்.ஆனால் வயதும் அந்த பக்குவமும் மறு வார்த்தைகளாக வெளி வருகிறது.இது இப்படியா என்று சில நேரம் கழித்து தான் தெரிகிறது.
நான் ஒரு இரண்டு வருடம் முன்பு இருந்த நிலைக்கும் இப்பொழுது இருக்கும் நிலைக்கும் பல மாற்றங்கள் தெரிவது ஒரு சாதரண விஷயம்.ஆனால் அன்று இந்த நிலையும் கடந்து போகும் என்ற எண்ணம் என் மனதில் தோன்ற மறுத்தது,தோன்றினாலும் அதை நம்ப மறுத்தது மனம்.அதற்கு காரணம் நம் State of mind.எதுவும் செய்ய முடியாது . அந்த நிலையில் நமக்கு Realisation பண்ண தெரியாது .ஆனால் நம்மக்கு ஒரு Sympathy பரிதாபம் தேடி கொள்ள நன்றாக தெரியும்.
இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் ,நேற்று என் நண்பனின் நண்பனை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விடுவதற்க்காக சென்று இருந்தேன்.எனக்கு அவன் அதிகம் பரிச்சயம் இல்லா விட்டாலும் ,அவன் ஒரு வேண்டுகோளாக கேட்டு கொண்டான்.மழை வேறு பெய்து கொண்டிருந்ததால் அது ஒரு உதவியாக எனக்கும் தெரிந்தது,நல்ல நாட்களில் நான் ஒரு சோம்பேறி .அசைய மாட்டேன்.
மழை பலமாக பிடிக்க நாங்கள் இருவரும் ஒரு டீ கடை ஓரத்தில் ஒதுங்கினோம்.ஒரு சிகரட்டை பற்ற வைத்தேன்.
" நீங்க ?'
இல்லங்க அடிக்க மாட்டேன் !!
டீ ?
ஓகே
இரண்டு டீ சொல்லிவிட்டு அவனிடம் வேலை பற்றி கேட்டு கொண்டிருந்தேன்.அவனும் நிதானமாக பதில் சொல்லிகொண்டிருந்தான்.அவனுக்கு ரயில் 11மணிக்கு என்பதால் இன்னும் இரண்டு மணி நேரம் எங்களிடம் இருந்தது.மேலும் நாங்கள் சென்ட்ரல் அருகில் வந்து சேர்ந்து விட்டோம் .அதனால் பேசுவதற்கு கொஞ்சம் நேரம் இருந்தது,
திடீர் என்று அவன் எதையோ வெறித்து பார்க்க ஆரம்பித்து விட்டான்.அவன் பார்த்து கொண்டிருந்தது ஒரு பெண் அணிந்து வைத்து இருந்த ஒரு குடையை .
என்னங்க ?
ஒன்னும் இல்லீங்க
பரவா இல்லை சொல்லுங்க
"ஒன்னும் இல்லீங்க' என்று பலமாக சொன்னதால் நானும் விட்டு விட்டேன்.
இருவரும் கிளம்பினோம் .மழை கொஞ்சம் வெறித்து இருந்தது.அவன் பைக்கில் வரும் பொழுது கொஞ்சம் கலங்கியது போல் நான் உணர்ந்தேன்.நான் ஒன்றும் கண்டு கொள்ள வில்லை.அவன் இறங்கி சென்று விட்டான் .நானும் வீடு திரும்பிவிட்டேன்,
ஒரு பதினோரு மணி அளவில் ஒரு செல்போனில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு.
நான் எப்பொழுதும் போல் எதையோ வலையில் தேடி கொண்டிருக்கும் பொழுது அந்த நம்பர் யாருடையது என்று கூட தெரியவில்லை,
ஹலோ நான் தினேஷ் பேசுறேன்
எந்த தினேஷ்
ஹலோ இப்பதான் தான் இறக்கி விட்டு ட்டு வந்தீங்க அதுக்குள்ள மறந்துட்டீங்க ?
ஆமா சொல்லுங்க
Sorry I was rude to you when you asked me !!
அப்படி எல்லாம் இல்ல சொல்லுங்க
என்று ஒரு கதை சொன்னான்.கொஞ்சம் சிரிப்பு வந்தது.கொஞ்சம் பரிதாபம் வந்தது.கொஞ்சம் பழைய விஷயங்கள் எனக்கும் நினைவில் வந்தது,
அவன் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டான் போலிருக்கிறது.அந்த பெண்ணுடன் அவன் பரோடாவில் வசித்து வந்திருக்கிறான்.இரண்டு மாதங்களில் பெண் வீட்டில் ஏதோ பிரச்சனை செய்து பெண்ணின் மனதை மாற்றி பிரித்து இன்று அந்த பெண் யாருடனோ கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறாள் என்று வருத்தப்பட்டார்.அந்த குடை போலவே ஒரு குடை அவள் வைத்து இருந்தாள் என்று அவர் கூறினார்.
என் நம்பரை அவர் தன் நண்பனிடம் கேட்டு வாங்கி அழைத்து இருந்ததால் அந்த நன்றிக்கு ,அவர் தன்னிலையை என்னிடம் தெரிவிக்க நினைத்த அந்த உணர்விற்கு மதிப்பு அளித்து நான் அவரிடம் என்னால் முடிந்த வரை சமாதனம் கூறினேன்.
இப்பொழுது சில எண்ணங்கள் என் மனதில் தோன்றுகின்றன !! நான் படித்து இருக்கிறேன் Visualizing memories என்பார்கள் .
அந்த நபர் அந்த குடையை பார்த்து அவர் அவளுடைய குடை போல் என்று கொண்டு அவர் எண்ணங்களை தூண்டி விட்ட அந்த நிலைக்கு Selforganised Learning என்பார்கள்.அதாவது நீங்கள் எதாவது .ஒரு சின்ன அளவுகோலை வைத்து ஒரு பெரிய நிகழ்வை நம் மனம் உருவாக படுத்தி கொண்டு சில உணர்வுகளை தூண்டிவிடுகிறது.இதை எந்த வகையில் தூண்டினாலும் ஒரு வகையான உணர்வே கிளறப்படும்.இதற்கும் Neurals க்கும் பல விதமான சம்பந்தங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.Unsupervised learning வகையை சேர்ந்தது இந்த மாதிரி எண்ணங்கள்.ஏதோ ஒரு நிகழ்வு நம் எண்ணங்களை எதிர்கொள்ளும் பொழுது அதை சார்ந்த பல நினைவுகள் கிளறப்பட்டு அதில் இருந்து கிளம்பும் ஒரு முக்கியமான உணர்வு.நம் மனம் சில விஷயங்களுக்கு பழக்கப்படும் அந்த கணங்கள் தான் அதற்கு காரணம்Learning என்று சொல்வார்களே ,அது எல்லா விஷயத்திலும் நடக்கிறது.
அதில் வரும் வகை தான் Adaptive Resonance Theory.மிக சுவாரசியமான ஒரு விஷயம் அதை நான் மேலோட்டமாக சொல்லுகிறேன்.மேலும் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்(Learning).அதில் Comparision field,Vigilence Field,Recognition Field என்று மூன்று நிலை உண்டு.அதில் அந்த Comparision field நம் நினைவலைகளை எடுத்து கொண்டு நம்மிடம் உள்ள ஒரு பொருத்தமான ஒரு நினைவிற்கு செலுத்தி பார்க்கும்.அதில் நடக்கும் ஒரு எதிர்ப்பலையை பொறுத்து நம் பயிற்சியோ அல்ல படிப்பினைகளோ கொள்ள படுகிறது.அது ஒரு புதிய செயல் ஆக நம் மனதில் கொள்ள படுகிறது.அந்த செயல்கள் ஏற்று கொள்ள படும் போது அது ஒரு உணர்வாக கொள்ள படுகிறது.
இது ஒரு உதாரணம்.
ஆனால் நம் மனதிற்கு தெரியாது இந்த பொழுதும் கடந்து செல்லும்.அதையும் மெதுவாக அது கற்று கொள்கின்றது.

6 comments:
Machi,
Kamal-ku oru chaos theory mathiri karthik-ku oru Adaptive Resonance Theory. Superb narration, Neuro cognitive science paper padicha mathri irukku. Keep writing on these kind on innovative subjects!!
-- Hussain
hussain
ithu konjam over...neuro cognitive :))))
thanks for ur motivation will try writing more
My honest opinion is this topic is too scientific and technical. Though it was nice and interesting, it could have been simplified further. But i thoroughly enjoyed the topic... I also liked how you related the normal incident with neurology, just the way Dinesh's thoughts related a normal incident with this subconscious incursion. Nice connectivity....
machi getting addicted to Net???Good, Nice post
@ Sriram.
I agree what u say.
@ vinoth
addicted to net? nope i would say getting inclined towards writing
Post a Comment