நுங்கம்பாக்கம் சென்னையின் செல்வ சீமாட்டிகள் வாழும் இடம்.அதில் எனக்கு அலுவலகம் இருப்பது ஒரு சுகம்.ஒன்று எனக்கு அண்ணா நகரில் இருந்து பக்கம்.இரண்டு அந்த செல்வ சீமாட்டிகளை பார்த்து ரசிப்பது.ரசிப்பது என்றால் எந்த நிலையிலும் கொள்ள வேண்டாம்.நான் சொல்லும் விதம் கிண்டலுக்கு கொஞ்சம் குறைவு.ரசிப்பதற்கு கொஞ்சம் அதிகம்.புரிந்து இருக்க வேண்டும்.
தினம் அலுவலகத்தில் காலையில் வரும் பொழுதே பல கார்களில் இருந்து அவர்கள் தங்கள் ஜிம் ஆடையில் வருவது ஒரு வேடிக்கை.காலை பதினோரு மணிக்கு ஜிம்முக்கு செல்பவர்கள் என்ன வேலை செய்வார்கள் என்று அடிக்கடி யோசித்து பார்ப்பேன்.
தினம் அலுவலகத்தில் காலையில் வரும் பொழுதே பல கார்களில் இருந்து அவர்கள் தங்கள் ஜிம் ஆடையில் வருவது ஒரு வேடிக்கை.காலை பதினோரு மணிக்கு ஜிம்முக்கு செல்பவர்கள் என்ன வேலை செய்வார்கள் என்று அடிக்கடி யோசித்து பார்ப்பேன்.
ஒரு நாள் ஓடிய கார் மற்றொரு நாள் இருக்காது.இன்று BMW என்றால் அடுத்த நாள் BENZ .இது எல்லாம் அவர்கள் கார்கள் தானா என்று அடிக்கடி யோசிப்பதும் உண்டு.பல சமயங்களில் தங்கள் நண்பர்களிடம் கார்களை மாற்றி கொள்வார்கள் என்று நான் கேள்வி பட்டேன்.அனால் அது உண்மையாக இருக்காது என்று எனக்கு தெரியும்.
மதிய வேளைகளில் அவர்களை பார்க்க முடியாது.நான்கு மணி போல் அவர்கள் வெளி வரும் பொழுது நான் சிகரட் புகைக்க சென்று கொண்டிருப்பேன்.அங்கு இருக்கும் ஆட்டோ காரனிடம் யாராவது ஒரு செல்வந்தன் சண்டை போட்டு கொண்டிருப்பன்.அது அவர்களுக்கு ஒரு வழக்கமாகவே இருக்கும்.பார்கிங் பிரச்சனை என்று தெரிந்து கொண்டேன்.சில நேரம் தங்கள் வீட்டு வேலைகாரர்களிடம் சொல்லி சிகரட் வாங்கி வர சொல்லுவார்கள்.
சிலர் தங்கள் நாய்களை ஒரு சங்கிலியில் மாட்டி கொண்டு ஒரு வாக்கிங் செல்வார்கள்.மதிய வேளைகளில் சப்வே ரெஸ்டாரண்ட் உள்ளே சில பெண்கள் அமர்ந்து தங்கள் கம்ப்யூட்டரில் எதோ பேசி கொண்டிருப்பார்கள்.வெறும் டயெட் மீல் தான் உண்பார்கள்.போன் மாத மாதம் மாறி இருக்கும்.சில பெண்கள் தங்கள் டிரைவரை வர சொல்லி அழைப்பார்கள்.அவன் வர தாமதமானால் அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டு காரின் உள் நுழைவார்கள்.
எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை --- கூலிங் கிளாஸ் அணிந்து இருப்பார்கள்.எல்லோர் அருகிலும் ஒரு மூச்சை நிறுத்தி விடும் அளவிற்கு ஒரு வாசனை திரவியத்தின் வாசம் (???) வரும்.எல்லோரும் தங்கள் வயதை மறைக்க என்ன என்னவோ ஒரு ஆடை அணிந்து இருப்பார்கள்.எல்லோரும் தங்கள் நிலையை மறந்து சிரிப்பார்கள்.ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ தான் பேசுவார்கள்.
அன்று நான் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று இருந்தேன்.நானும் நண்பனும் பார் அருகே நின்று சில விஷயங்களை பற்றி பேசி கொண்டிருந்தோம்.அப்பொழுது அந்த கூட்டத்தில் ஒரு கூச்சல் .ஒரு பெண்மணி தன் நிலையை மறந்து நடந்து கொண்டிருந்தார்.அவரை கட்டுபடுத்தவும் முடியவில்லை.அவரை அழைத்து செல்லவும் ஆளில்லை .அவருடன் வந்த நபர் அவரை விட்டு விட்டு சென்று விட்டார்.அதனால் அந்த பெண்மணி நடந்து கொண்ட விதம் அங்கு இருந்த பல பெண்களை கண் கூச வைத்தது.எங்களால் என்ன செய்ய முடியும்.சிறிது நேரத்தில் அவர் டிரைவர் உள்ளே நுழைந்து அவரை அழைத்து சென்றான்.
இன்று அதே பெண்.நுங்கம்பாக்கம் OXFORD புத்தக நிலையத்தில்.
" Can I get some books on Pilgrimage to Amarnath"
"No Mam we are running out of stock on Pilgrimage books ,would u like to try some thing on Transcedental Meditation''
"No thanks ,I have read all those you have "
எனக்கு சிரிப்பு வந்து விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்.அவருக்கு தேவை அந்த புத்தகம் அல்ல "How to behave after four rounds of Scotch" தான் என்று சொல்லிவிட்டு வரலாமா என்று நினைத்தேன்.

11 comments:
ending piri da...
sk
I think you missed to mention something in the end as it looks really incomplete.... You said that the lady misbehaved right. But i did not really see anything explaining her misbehaviour. All i could get from reading it is that she has asked for which he got reply that its out of stock. Thats all. Looks like you missed something....
machi nice da.. think u are not getting more time to elaborate lot of things.. anyways that was a nice observation :P
@ S.K
Thanks machi
@Sriram.
I just read it once again..i didnt leave out any thing...i didnt know what was her reason for her misbehaviour.I just wanted to show the imbalances of their temperament in life in two incidents...one a drunken lady another event she was a woman searching for meditation books a highly pious too...thats it..
@Vinoth
i have time...but i wanted it be crisp
have a different opinion Karthik... I could compare them with housewives or home makers sitting at home, watching television serials and cursing all the lady villains in the serial and end of the day doing the same stuff at home what they cursed in TV. Every one have their own way of living and may be who knows the lady might've taken a little too much for her to handle, doesnt mean she should not be reading a spiritual book...May be you had something in your mind and not brought in completely in this write up...just my opinion :)
@ Bharath
I agree i had some thing and all have felt the same that i have presented in a different way,It was not that she should not be reading a spirutual book what i meant was to show the way the life is lead by them,i see across my day to day life near office for hours.some times even ten times a day...all the things which were done by them is not a usual stuff...like sitting in subway for three four hours and discussing abt the perfumes,fighting with the auto drivers for parking,,and atlast in the pub fighting and yelling ,,,,,next day i found the woman searching for a spiritual book so composed...i dont know now...what i was abt to bring in this post.
simple, they chose to stay with that life and we have chosen ours...may be they have so much of pain inside and might be easing it out like this or might be extremely happy with this way of life, we never know! but sure i've seen people coming to Barista or "Amethyst" in a Civic at 12 noon and spend hours together gossiping with friends...may be they are happy with this and hence we might be envying it or hating it for the mundane routine...
Well...had the post been by a teenaged kid with a communist bent of mind, i wud have liked it!
[personally, for unknown reasons, i "too" hate rich people who take their dogs for purposeless evening walks. but i know, my thinking is flawed]
@Sundar...I dont know what to reply for ur comment..because its not that i dont like them..its just observation thats it :P
Post a Comment