இப்படியும் மனிதர்களா என்று தோன்றியது.அன்று காலை நுங்கம்பாக்கம் வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது பல ஜெட் ஏர்வேய்ஸ் உழியர்கள் ரோட்டில் நின்று விவாதித்து கொண்டிருந்தது எனக்கு சரி என்று பட்டது.ஜெட் தன் ஆயிரம் உழியர்களை பணியில் இருந்து இந்தவாரம் நீக்கி இருந்தது.அதற்க்கு காரணமும் இருந்தது.கிங் பிஷேர் உடன் இணைந்த உடன் அந்த பணி நீக்க விபரம் வெளி வந்து இருந்தது.செலவு குறைப்பு என்று காரணமும் சொல்லப்பட்டது.
இரண்டு நாட்கள் சென்று இன்று நரேஷ் கோயலின் பேட்டி மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
"என்னால் தூங்க முடியவில்லை.என் முடிவு என்னை குத்தி கொண்டிருக்கிறது.நான் செய்தது சரி அல்ல.நான் எல்லா உழியர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்.வெளி ஏற்ற பட்ட எல்லா உழியர்களும் நாளை முதல் வேலைக்கு வரலாம்.நான் கொஞ்சம் அதிர்ந்து விட்டேன்.என்னால் கண்ணீரை பார்க்க முடியாது,அதுவும் என் உழியர்களிடம்.நான் என் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும்.என் மறைந்த என் தாயிற்கும் பதில் சொல்ல வேண்டும்.என் உழியர்கள் தான் என் குடும்பம் .சம்பளம் எப்படி சரி செய்ய படும் என்று இப்பொழுது முடிவெடுக்க வில்லை.ஆனால் அது சரி செய்ய படும் நான் எந்த ஒரு கட்டாயத்திலும் நான் இந்த முடிவை எடுக்க வில்லை.நான் என் மேற்குழுவிடம் இன்னும் பேச வில்லை .என் மனசாட்சியில் இந்த முடிவை என் உழியர்களுக்கு எடுக்கிறேன் " என்று முடித்தார்.
அரசும் இந்த முடிவை ஒரு புரட்சி என கூறி இருக்கிறது.இது எதோ சினிமாவில் வருவது போல் பேச்சாக இருந்தது.ஆனால் நிஜத்தில் அவர் கூறிய வார்த்தைகள் உண்மையாக தான் எனக்கு பட்டது.இதில் அரசியல் தலையிடு இருக்கலாம்.இல்லாமல் இருந்து இருக்க முடியாது.ஆனால் அது கண்டிப்பாக ஒரு நாடகமாக இருந்து இருக்க முடியாது.அப்படி என்றால் பல ஐ .டி தொழிலதிபர்கள் இது போல் மிரட்டல்களால் எந்தனை முறை நடித்து இருக்க வேண்டும் இந்த மூன்று மாதத்தில் .
ஒரு மிகபெரிய தொழில் அதிபரின் எவ்வளவு உணர்ச்சிகரமான பேச்சை இன்று வரை கேட்டது இல்லை.திருபாய் அம்பானியின் ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் வீடியோவில் பார்த்து இருக்கிறேன்.லீவரின் எம் .எஸ் .பங்கா பேச்சுவார்த்தை கேட்டிருக்கிறேன் .ஜகதிஷ் கட்டார் மாருதியில் புரட்சி ஏற்படுத்திய பொழுது அவரது எண்ணங்களை கேட்டு இருக்கிறேன்.இது தான் முதன் முறை ஒரு தொழியாதிபர் மனசாட்சியை பற்றி பேசுவது.
நிதம் நஷ்டத்தில் ஓடும் இந்த தொழிலில் இருந்து கற்று கொள்ளவேண்டும் ஐ டி தொழிலதிபர்கள்.கடுமையான காலங்களை எதிர் நோக்கி இருக்கும் பொருளாதாரத்தில் இந்த ஒரு முடிவு ஒரு ஊக்கம் என்றே சொல்ல வேண்டும்.


4 comments:
Vey well said dude..
Even i am thinking of getting into manufacturing sector dude (Family Man ehehhe)
@ Vinoth
who said there is no lay off in manufacturing sector,,check out sunday paper ,,,chinese toy maker has laid of 1000 employees,,,
Sorry mate, you have fallen prey to Naresh Goel's acting prowess.
Does he not know that people would cry if they were to be chased out of a job? Only after seeing them cry, does his conscience prick him? I am not buying this...
This does not show us a show of consciencious decision, but just a way to console people for the moment. The lay off will now happen in phases and in the form of "lack of performance terminations".
Sabs.
u think its a acting...May be ...But still have u ever thought any of the business minds of the country loosing their emotion...Never I havent seen.And its a known fact the firing makes people suffer..I would say atleast he realised it...Rather just commenting like other Companies as employee rationalisation,Performance balancing hypothesis and all some craps whicha are being spelt out these days...
I dont see a better tomorrow atleast for some time..:(
Post a Comment